Sunday, December 17, 2017

    ஜெ., உடல் நிலை, குறித்து,பொய்யான தகவல்,சொன்னது... உண்மையே !
 
ஜெ., உடல் நிலை குறித்து, பொய்யான தகவல் சொன்னது உண்மையே' என, சென்னை, அப்பல்லோ மருத்துவ குழுமத் தலைவர், பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தடுப்பதற்காகவே, அவ்வாறு கூறியதாகவும், அவர் திடீர் விளக்கம் அளித்துள்ளார். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜெ., அனுமதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.



முதல்வராக இருந்த ஜெ., 2016 செப்., 22ல், உடல் நலக்குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 'அவர் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; விரைவில், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்' என, மருத்துவமனை சார்பில், அப்போது அறிக்கை வெளியிடப்பட்டது.


அதை அனைவரும் நம்பினர்; ஆனால், அவர் வீடு திரும்பவில்லை.சந்தேகங்கள்'அவர் உடல் நலம் தேறி விட்டார்; இட்லி சாப்பிடுகிறார்; கிச்சடி சாப்பிடுகிறார்; நர்சுகளுடன்
கலந்துரையாடினார்; அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்' என, பல தகவல்கள் வெளியாகின. அமைச்சர்களும், ஜெ.,வை சந்தித்ததாக, பொய் கூறினர். ஆனால், ஜெ., வீடு திரும்பாமல், டிச., 5ல், மரணமடைந்தார்.இது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விடை காண, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் விசாரணையில், பல்வேறு உண்மைகள் வெளிவரத் துவங்கி உள்ளன. அமைச்சர்கள், 'ஜெ.,வை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை' என, 'பல்டி'அடித்தனர்.


ஜெ., உடல் நிலையை கவனிக்க, அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களும், 'ஜெ.,வை சந்திக்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் சாட்சியம் அளித்தனர்.ஜெ., அண்ணன் மகன் தீபக், விசாரணை கமிஷனில், 'மருத்துவமனைக்கு ஜெ., கொண்டு வரப்பட்ட போது, சுய நினைவு இல்லாமல் இருந்தார்' என, தெரிவித்தார். 


அரசு தரப்பில் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளும், அதை உறுதி செய்துள்ளன. இதெல்லாமே உண்மையே' என, ஓராண்டுக்கு பின், சென்னை, அப்பல்லோ மருத்துவ குழுமத் தலைவர், பிரதாப் ரெட்டி ஒப்பு கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, அவர் சென்னையில், நேற்று அளித்த பேட்டி:


ஜெ., மரணம் தொடர்பாக, விசாரணை நடந்து வருவதால், அதைப் பற்றி பேச முடியாது. அவர், மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே, ஆபத்தான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார். மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவே, அவருக்கு காய்ச்சல் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.


உலகத்தர சிகிச்சை

தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, உண்மையை கூற முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாகவே, மருத்துவமனை அறிக்கைகளில், உண்மைக்கு மாறான செய்திகள் இடம் பெற்றன.அதேநேரத்தில், அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, உலகத்தர சிகிச்சை அளிக்கப்பட்டது; ஆனாலும், நோயின் தீவிரத்தால், அவர், எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனிடம் இருந்து, தற்போது வரை, எனக்கு, 'சம்மன்' வரவில்லை. என் மருத்துவமனை டாக்டர்களுக்கு, சம்மன் வழங்கப்பட்டது குறித்து, எனக்கு தெரியாது. சம்மன் அளித்தா லும், எங்களுக்கு கவலையில்லை. எங்கள் தரப்பில், ஜெ., வுக்கு, சிறந்த முறை யில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

நடந்தது என்ன?

மருத்துவமனைக்கு வரும் போது, ஜெ., ஆபத் தான நிலையில் இருந்தார் என்றால், அவர் வசித்த, சென்னை,போயஸ் கார்டனில் அவருக்கு நிகழ்ந்தது என்ன என்ற, கேள்வி எழுந்துள்ளது.அத்துடன், அப்பல்லோ மருத்துவ மனை தவறான அறிக்கை வெளியிட வேண்டும் என, சசிகலாவும், அவரின் குடும்பத் தினரும் நிர்ப்பந்தம் செய்தனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, ஜெ., மரண விவகாரத்தில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள், விரைவில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024