காலத்தை வென்றவர்...காவியமானவர்!
'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்' என்ற பாடலுக்கு ஏற்ப, மறைந்து முப்பது ஆண்டுகள் கடந்தும், மக்கள் மனங்களில் எம்.ஜி.ஆர்., வாழ்கிறார். சினிமா, அரசியல் வரலாற்றில் பல சாதனைகள் படைத்த இவர், காலத்தை வென்ற தலைவராக திகழ்கிறார்
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்ட இவர், 1917 ஜன.,17ல் இலங்கையின் கண்டியில் பிறந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., வருமானத்திற்காக சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து நாடகங்களில் நடித்தார். அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் கால்பதித்தார்.
அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல்வேறு பரிணாமங்களில் ஜொலித்தார்.
பிஞ்சு மனதில் நஞ்சை கலக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தஎம்.ஜி.ஆர்., சினிமாக்களில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் ஒரு கொள்கையாக கொண்டிருந்தார்.
சினிமாவில் வெற்றிக்கொடி
எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் 'சதிலீலாவதி'. 1936ல் வெளி வந்தது. 1971ல் வெளியான
'ரிக் ஷாக்காரன்' படத்திற்காக, சிறந்த நடிகருக்கான 'தேசிய விருது' பெற்றார். பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். தயாரிப்பாளராகவும் அசத்தினார்.
அரசியல் களம்
தி.மு.க.,வின் பொருளாளராக இருந்த இவர், 1967ல் முதல்முறை எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாதுரைமறைவுக்குப் பின் 1972 அக்.,17ல் அ.தி.மு.க.,வை துவக்கினார். போட்டியிட்ட முதல் சட்டசபை தேர்தலிலேயே (1977), ஆட்சியைப் பிடித்தார். 1977 ஜூன் 30ல் முதல்வரான இவர், தொடர்ந்து 1987 டிச., 24ல் மறையும் வரை முதல்வராக இருந்தார்.
விருது
சத்துணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல திட்டங் களுக்காக 1988ல் மத்தியஅரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment