Friday, December 15, 2017

அதிகாலையில் கோலம் போடுகிறீர்களா?' கூட்டம்போட்டுப் பெண்களை அலர்ட் செய்த போலீஸ்

ம.அரவிந்த் பாலஜோதி.ரா

 

 மார்கழி மாதம் என்றாலே வாசலை அடைத்துப் போடப்படும் பெரிய பெரிய வண்ணமயமான மாக்கோலங்கள்தான் அழகு. வீட்டுப் பெண்கள் ஆர்வமுடன் அதிகாலையிலேயே இதற்கென்று தயாராகிவிடுவார்கள். இப்போது அதற்கும் செயின் பறிப்பு திருடர்கள் மூலம் ஆபத்து வந்து விட்டது.
அதாவது, வைகறைப் பொழுதில் தங்கள் வீடுகளுக்கு முன்னால் கோலம்போடும் பெண்களைக் குறிவைத்து செயின் பறிப்புத் திருடர்கள் புறப்பட்டுவிட்டார்கள். அது குறித்த விளக்கம், விழிப்பு உணர்வுக் கூட்டம் இன்று புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மகால் ஒன்றில் நடந்தது. இதில் கலந்துகொண்ட புதுக்கோட்டை நகர காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம், கலந்துகொண்ட பெண்களிடம் கோலம் போடும்போது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேசினார். தவிர, கலந்துகொண்ட பெண்களுக்கு குற்றத் தடுப்பு முறைமைகளை விவரிக்கும் கைப்பிரதிகளையும் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், "கோலம் சம்பந்தப்பட்ட கூட்டம்னு கூப்பிட்டதும் வண்ணக்கோலப்பொடி இலவசமாகத் தருவார்கள் என்று நினைத்து வந்தோம். இங்கு வந்த பிறகுதான் புரிந்தது, கோலம்போட வாசலுக்கு வருவதில் எவ்வளவு ஆபத்தான நிலைமை இன்றைக்கு நிலவுகிறது என்பது. நாம் முன்னெச்சரிக்கை முன்னேற்பாடுகள் இல்லாமல் அலட்சிய மனப்பான்மையுடன் கோலம் போடுவோமெனில், நமது கழுத்தில் உள்ள தாலிச் செயின் களவு போவதோடு, உயிருக்கும் ஆபத்தான நிலைமை ஏற்படும் என்ற உண்மையை இந்தக் கூட்டத்துக்கு வந்ததால் தெரிந்துகொண்டோம்" என்றார்கள்.


 டி.எஸ்.பி. ஆறுமுகத்திடம் பேசினோம். "மார்கழி மாதத்தில் இருட்டோடு எழுந்து கோலம் போடுவது நமது பெண்கள் பின்பற்றி வரும் பாரம்பரிய பழக்கமாக இருக்கிறது. ஆள் அரவமற்றத் தெருக்களில் வெளிச்சம் இல்லாத அந்த அதிகாலையில் கோலம் போடும் பெண்களைக் குறிவைத்து சங்கிலி பறிப்புத் திருடர்கள் நடமாடி வருகிறார்கள். அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைமைகள் பற்றி பெண்களுக்கு விவரித்தோம். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதானே தவிர, பெண்களை கோலம்போட வெளியே வரக்கூடாது என்று தடுப்பதற்காக அல்ல" என்றார்.

இந்தக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்திருந்தாலும் காவல்துறை கொடுத்திருக்கும் அறிவுரைகள் கோலம் போடுவதில் ஆர்வமுடைய அத்தனை தமிழ்நாட்டுப் பெண்களுக்குமானது. எனவே, ஒட்டுமொத்த பெண்களின் பொதுநலன் கருதி, அந்த அறிவுரைகளை இங்கே தருகிறோம். இருள் சூழ்ந்திருக்கும் அதிகாலையில் கோலம் போடுவதைத் தவிர்த்துவிட்டு, நன்றாக விடிந்தபிறகே கோலமிடுங்கள். கூடுமானால் சூரிய வெளிச்சம் வந்த பிறகு கோலம்போடும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இல்லை, நாங்கள் அதிகாலையில்தான் கோலமிடுவோம் என்பீர்கள் எனில், துணைக்கு வீட்டு ஆண்களை உடன் வைத்துக்கொள்ளவும். உங்கள் கழுத்தை சேலைத் தலைப்பு, துப்பட்டா, டர்க்கி டவல் போன்றவற்றில் ஒன்றைச் சுற்றிக்கொள்ளும். உங்கள் வீட்டு வாசலில் போதிய வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு சக்கர வாகனத்திலோ நடந்தோ உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் வந்தாலோ குடிக்கக் தண்ணீரோ அல்லது முகவரியோ கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும். முகத்தை மறைத்து பனிக்குல்லா, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் யாரேனும் உங்களை நெருங்கினால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் வீட்டின் முகப்பில் cctv கேமரா, ஆபத்துக்கால அலாரம் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்'' என்று அறிவுரை வழங்கினார்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...