Friday, December 8, 2017

போரூரில் சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்ட வணிக வளாகம் திறப்பு : சவரனுக்கு ரூ.1,000 தள்ளுபடி

Added : டிச 08, 2017 00:09



சென்னை: சென்னையின் முன்னணி வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ், ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனைக்காக, 'சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்' என்ற பெயரில், பிரமாண்ட வணிக வளாகத்தை, போரூரில் நேற்று திறந்து உள்ளது.

இந்த வணிக வளாகத்தை, லட்சுமி அம்மாள் திறந்து வைத்தார்; ரேவதி அம்மாள் குத்துவிளக்கேற்றினார்.

திறப்பு விழாவில், நிறுவனர் ராஜரத்னம் பேசியதாவது: சென்னை, தி.நகர் ரங்கநாதன் தெருவில், 1966ல், பாத்திர விற்பனை உடன் துவங்கிய சரவணா ஸ்டோர், தற்போது ஜவுளி, ரெடிமேடு, வீட்டு உபயோக பொருட்கள் என, அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.
மேலும் புரசைவாக்கம், குரோம்பேட்டையைத் தொடர்ந்து, போரூரில்,'சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்' திறக்கப்பட்டு உள்ளது. வெளியூர்களில் இருந்து எங்கள் கடைக்கு வருவோர், 'எப்போது நகைக்கடை திறக்க போகிறீர்கள்' என்ற கேள்வியை முன்வைப்பர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, இங்கு ஜவுளிக்கடை உடன் இணைந்த நகைக்கடையை திறந்து உள்ளோம்.


 இங்கு, டிச., 7 முதல், 11 வரை, அனைத்து நகைகளுக்கும், கிராமுக்கு, 125 ரூபாய் வீதம், சவரனுக்கு, 1,000 ரூபாய் சலுகை வழங்கப்படும். இங்கு, மூன்று லட்சம் சதுரடி பரப்பளவில்,எஸ்கலேட்டர் வசதிடன், 10 தளங்கள் உள்ளன. ஜுவல்லரி, ஜவுளி, பட்டு, ரெடிமேடு, அழகு சாதன பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், எலக்ட்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் என, அனைத்தும் சில்லரை விலையில் கிடைக்கும்.

விரைவில், அனைத்து சரவணா ஸ்டோர்ஸ் கடைகளிலும், தங்க நகை கடை திறக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்கு னர், சபாபதி, சுனிதா சபாபதி, ரோஷன் ஸ்ரீ ரத்னம், யோகேஷ் ஸ்ரீ ரத்னம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024