Thursday, December 21, 2017

தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்

By DIN  |   Published on : 20th December 2017 08:45 PM  
தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் தற்போது குறைந்தபட்சமாக மூன்று ரூபாயாக உள்ள கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் சாதாரண பேருந்துகளின் கட்டணம்  கிலோ மீட்டருக்கு 42 காசில் இருந்து 60 காசாக உயர உள்ளது. எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 56 காசில் இருந்து 73 காசாக உயர உள்ளது. சூப்பர் டீலக்ஸ் பேருந்து கடடணம் 60 பைசாவில் இருந்து 75 காசாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 70 பைசாவில் இருந்து 95 பைசாவாக உயர உள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளின் கட்டணம் அதிகப்பட்ச 25 ரூபாய் வரை உயர உள்ளதாகவும் சென்னையில் இருந்து மதுரைக்கு அரசு விரைவு பேருந்துகளின் கட்டணம் ரூ.325 ல் இருந்து  ரூ.440 ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது. 

கடந்த 2011-ம் ஆண்டு, தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...