Tuesday, January 16, 2018

சுகாதாரத்துறை அமைச்சர் வருகை; கழிவறையில் அமர வைக்கப்பட்ட நோயாளி

Added : ஜன 16, 2018 01:35


 புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, சுகாதார அமைச்சர் வந்ததால், நோயாளியை கழிவறையில் அமர்த்திய மருத்துவமனை நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 20 நாட்களுக்கு முன், அறந்தாங்கியை சேர்ந்த பஷீர்அலி,48 அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உறவினர்கள் கைவிட்டதால், யார் ஆதரவுமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், பஷீர் அலிக்கு யாரும் இல்லாததால், அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த, மருத்துவமனை நிர்வாகம், ஐந்து நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்துள்ளது. இதையடுத்து செய்வது அறியாமல் தவித்த பஷீர் அலி, மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு நுழைவு வாயில் கதவு முன், இருந்துள்ளார். யார் ஆதரவுமின்றி தவித்த பஷீர் அலிக்கு, அதே மருத்துவமனையில், தன் மனைவியின் சிகிச்சைக்காக வந்திருந்த ஒருவர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.

நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சி.டி., ஸ்கேன் திறக்க, தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வந்தார். அமைச்சர் வருகையால், மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு நுழைவாயில் கதவு முன் இருந்த பஷீர் அலியை, மருத்துவமனை நிர்வாகம் புறநோயாளிகள் பிரிவில் உள்ள கழிவறையில் அமர்த்தியுள்ளது. அவருக்கு உதவி செய்து வந்தவரும், மனைவிக்கு உடல்நலம் சரியானதால், நேற்று மருத்துவமனையிலிருந்து சென்று விட்டார்.

இந்நிலையில் யார் ஆதரவுமின்றி மருத்துவமனை கழிவறை அருகே, பஷீர்அலி மருத்துவ உதவியின்றி தவித்து வருகிறார். இந்த தகவல் வெளியே பரவியதால், அதிர்ச்சி அடைந்துள்ள சமூக ஆர்வலர்கள், மனிதநேயமற்ற மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்துள்ளனர்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...