19 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Updated : பிப் 19, 2018 20:04 | Added : பிப் 19, 2018 19:14சென்னை:தமிழகத்தில் 6 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 19 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு வருமாறு,
சிவகங்கை கலெக்டர் மலர்விழி- தருமபுரி கலெக்டராகவும், கடலுார்- பிரசாந்த் மு.வடநேரே-கன்னியாகுமரி கலெக்டராகவும்,தொல்லியல்துறை இயக்குனர் அன்பழகன் கரூர் மாவட்ட கலெக்டராகவும், மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி, கடலுார் கலெக்டராகவும், சென்னை சுகாதார இயக்குனர் விஜயலட்சுமி அரியலுார் மாவட்ட கலெக்டராகவும், வணிகவரித்துறை இயக்குனர் மரியம் பல்லவி பால்தேவ் தேனி மாவட்ட கலெக்டராகவும் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்
லட்சுமிப்ரியா , சென்னை, வணிகவரித்துறை இணை கமிஷனர்,
வெங்கடாஜலம், பி்ற்பட்டோர் நலத்துறை இயக்குனர்,
கோவிந்தராஜ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை இயக்குனர்.
விவேகானந்தன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்கனர்.
பழனிசாமி, தொழில்நுட்ப கல்வி இயக்குனர்,
சமயமூர்த்தி, போக்குவரத்து துறை ஆணயைர்,
சுப்பையன், தோட்டக்கலைத்துறை,
மோகன், பொதுப்பணித்துறை துணை செயலர்,
மேகநாத ரெட்டி, நிலநிர்வாக ஆணையர்.
தயானந்த் கட்டாரியா, தலைவர், பவர் பைனான்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம்
No comments:
Post a Comment