Tuesday, February 20, 2018

விஜயகாந்துடன் கமல் சந்திப்பு அரசியல் பற்றி 10 நிமிடம் பேச்சு

தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தை சந்தித்து, அரசியல் பயணம் குறித்து, நடிகர் கமல், 10 நிமிடம் பேசினார்.




அரசியல் கட்சி துவங்க உள்ள, நடிகர் கமல், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். முதலில், விஜயகாந்த் தயங்கியதாக தெரிகிறது. பின், கமலை சந்திக்க
சம்மதித்து உள்ளார்.

நலம் விசாரிப்பு

அதன்படி, நேற்று காலை, 11:55 மணிக்கு, சென்னை, கோயம்பேடு, தே.மு.தி.க.,

அலுவலகத்திற்கு, கமல் சென்றார். அவர் வருவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன், விஜயகாந்த் வந்தார். விஜய காந்த் மைத்துனர், சுதீஷ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், கமலை, விஜயகாந்த் அறைக்கு அழைத்துச்சென்றனர்.அங்கு, பகல், 12:00 மணிக்கு உள்ளே சென்ற கமல், பிற்பகல், 12:10 மணிக்கு வெளியே வந்தார். இந்த சந்திப்பின் போது, விஜயகாந்தின் உடல்நிலை குறித்தும், தே.மு.தி.க., கட்டமைப்புகள் குறித்தும், சில கேள்வி களை, கமல் எழுப்பி உள்ளார். அதற்கு சிரிப்பையே, விஜயகாந்த் பதிலாக அளித்து உள்ளார்.இருவரும் கட்டி அணைப்பது போலவும், இருக்கையில் அமர்ந்து பேசுவது போலவும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
கமல்அளித்த பேட்டி:
வாழ்த்து

சகோதரர் விஜயகாந்தை சந்தித்து, நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அதனால், இன்று அவரை சந்தித்து பேசினேன். வயதிலும், சினிமாவிலும் மூத்தவனாக, நான் இருந்தாலும், அரசியலில்

, எனக்கு மூத்தவர் விஜயகாந்த். என் அரசியல் பயணம் குறித்து, அவரிடம் கூறினேன். விஜயகாந்தின் உடல் நலத்தை பற்றியும் விசாரித்தேன்.'நீங்கள் கண்டிப்பாக, அரசியலில் ஈடுபட வேண்டும்' என, அவர் வாழ்த்தினார். திராவிட அரசியல், இனி எடுபடாது எனக் கூறுவது தவறு. திராவிட அரசியலை பின்பற்றி, வெற்றி பெற்று காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...