பெண்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள், பலாத்காரத்துக்கு 6,500 ரூபாய் தான் இழப்பீடா?- கேள்விகளால் விளாசிய உச்ச நீதிமன்றம்
Published : 15 Feb 2018 19:28 IST
பிடிஐ புதுடெல்லி
பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?, ஒரு பெண் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டால், அதற்கு ரூ.6,500 தான் விலையா?, இழப்பீடா? என்று உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை கேட்டு விளாசியது.
நிர்பயா நிதியில் இருந்து பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு குறித்து மத்தியப் பிரதேச அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மீது இத்தகைய கடுமையான கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி டெல்லியில் மருத்துவம் பயின்ற மாணவி நிர்பயா, 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
இதையடுத்து, அப்போதைய காங்கிரஸ் அரசு 2013ம் ஆண்டு, இயற்றிய சட்டத்தில் நிர்பயா நிதித் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியை பெண்களின் பாதுகாப்புக்கும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடு அளிக்கவும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக நிர்பயா நிதியை மாநில அரசுகள் எவ்வாறு பயன்படுத்தின?, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுக்கப்பட்ட இழப்பீடுகள் என்ன? என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மாதம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மத்தியப் பிரேதசம் அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த பிரமாணப்பத்திரத்தை படித்துப் பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 1,951 பெண்களுக்கு இழப்பீடாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6,500 மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட நீதிபதிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
அப்போது நீதிபதிகள் மத்தியப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரை கடுமையாக கடிந்தனர்.
அவர்கள் பேசுகையில், “ இதுதான் உங்கள் மாநில அரசின் பிரமாணப்பத்திரமா? உங்கள் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சராசரியாக ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.6,500 வரை மட்டுமே கொடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள்.
பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு இதுதான் உங்கள் விலையா? பெண்கள் மீது உங்கள் அரசு காட்டும் கருணை இதுதானா?
மத்தியப் பிரதேச மாநில அரசின் புள்ளிவிவரங்கள் எல்லாம் பிரமாதமாக, மெச்சும்படியாக இருக்கிறது. மாநிலத்தில் 1,951 பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரூ.6,500 இழப்பீடு அளித்துள்ளீர்கள். உங்களின் பணி சிறப்பானதுதான் என நினைக்கிறீர்களா? என்ன இது?
நிர்பயா நிதியின் கீழ் மத்தியப் பிரதேச அரசுதான் அதிகமான நிதியை பெற்று இருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட 1,951 பெண்களுக்கு மொத்தமே ரூ. ஒரு கோடிதான் செலவு செய்து இருக்கிறீர்கள்.
இவ்வாறு நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.
மேலும், ஹரியானா அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததற்கு கடுமையான கண்டனத்தை நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது ஹரியானா மாநில அரசின் வழக்கறிஞர் விரைவில் தாக்கல் செய்கிறோம் எனத் தெரிவித்தார்.
அப்போது மிகவும் கோபப்பட்ட நீதிபதிகள், “ நீங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால், உங்கள் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரியும்.
உங்களுக்கு தேவைப்படும் அளவுக்கு நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மாநிலத்தில் உள்ள பெண்களிடம் சென்று, அவர்களின் பாதுகாப்பை பற்றி கவலைப்படவில்லை எனக் கூறுங்கள்” எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே 24 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என்பதற்கு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் பெண்களின் பாதுகாப்பிலும், நலனிலும் அக்கறை இருக்கும் மாநில அரசுகள் அடுத்த 4 வாரங்களுக்குள் தங்களின் பிரமாணப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்து ஒத்திவைத்தனர்.

No comments:
Post a Comment