ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
Published : 15 Feb 2018 13:41 IST
மும்பை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடான வகையில் பணி பரிமாற்றம் நடந்துள்ளதை தொடர்ந்து, மோசடி எவ்வாறு நடந்துள்ளது என்பது குறித்து அந்த வங்கியின் சார்பில் மற்ற வங்கிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடந்ததது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து 280 கோடி ரூபாயை ஏமாற்றியதாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் ஆகியோர் மீதும் மோசடி புகார் உள்ளது.
இதைத்தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் பல வாடிக்கையாளர்களுக்கு முறைகேடான முறையில் பண பரிமாற்றம் செயயப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணப் பரிவர்த்தனை செய்த வகையில் பல கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது. சுமார் 11,500 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியானது.
இந்நிலையில் மற்ற வங்கிகளையும் எச்சரிக்கும் வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் இந்த மோசடி எப்படி நடந்தது என்பது பற்றி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
‘‘எங்கள் வங்கியில் பயன்படுத்தப்படும் சுவிப்ட் நடைமுறையை சில கிளைகளில் உள்ள கீழ் நிலை ஊழியர்கள் முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள எங்கள் வங்கிக் கிளைகளில் பல வாடிக்கையாளர்களுக்கு ‘பையர் கிரெடிட்’ பெற்றுள்ளனர்.
இதன்படி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும்போது, அதற்காக இரு நிறுவனங்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்கூட்டியே பணப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. சில நிறுவனங்கள் பெற்றுள்ள இந்த சலுகையை பயன்படுத்தி, ஊழியர்களின் துணையுடன் மோசடி செய்துள்ளனர். இதுபோன்ற பரிவர்த்தனைக்கு வழங்கப்பட்டுள்ள தொகை மதிப்பீட்டை உயர்த்திக் காட்டி ஊழியர்களும் முறைகேடு செய்துள்ளனர்.
இந்த வங்கிக்கணக்குகள் நடப்பு கணக்குகளாக இருப்பதாலும் கோர் பாங்கிங் முறையில் பரிவர்த்தனை செய்யப்படுவதாலும் உடனடியாக கண்டுபிடிக்க முடிவில்லை. மோசடி செய்தவர்கள் திட்டமிட்டே இதனை பயன்படுத்தியுள்ளனர். பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட 90 நாட்களுக்கு மட்டுமே கடித ஒப்பந்த அடிப்படையில் பண பரிவர்த்தனை செய்ய முடியும்.
ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த நெறிமுறைகளை வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளின் சில கிளைகள் பின்பற்றவில்லை. இதன் மூலமே மோசடி செய்ய ஏதுவாகியுள்ளது. எனவே மற்ற வங்கிகளின் கிளைகளிலும் இதுபோன்ற முறையில் மோசடிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதால் இந்த எச்சரிக்கையை விடுக்கிறோம்’’ என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் வங்கிகளுக்கு இடையே பணப் பரிமாற்றம் செய்ய ‘சுவிப்ட்’ என்ற நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய வங்கிகளுக்கு இடையிலான நிதி தொலைத்தொடர்பு அமைப்பு (Society for Worldwide Interbank Financial Telecommunications) என்பதின் சுருக்கமே சுவிப்ட் எனப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள வெவ்வேறு வங்கிக் கிளைகள், வெவ்வேறு நாணய மாற்று அடிப்படையில் பணத்தை பாதுகாப்பகாகவும், அதே சமயம் எளிமையாகவம், வேகமாகவும் அனுப்புவதற்கு சுவிப்ட் நடைமுறை பயன்படுகிறது.

No comments:
Post a Comment