பல்கலை பணி முறைகேடு : கவர்னர் அறிக்கை கேட்பு
Added : பிப் 15, 2018 00:22
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பணி நியமன பிரச்னைகள் குறித்து, விரிவான விளக்கம் அளிக்க, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். உயர்கல்வித்துறையில், ஆறு ஆண்டுகளில் நடந்த பணி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றில், முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பாரதியார் பல்கலையில், பேராசிரியர் நியமனத்துக்கு, 30 லட்சம் ரூபாய் பேரம் பேசிய புகாரில், பல்கலை துணைவேந்தர், கணபதி, கைது செய்யப்பட்டு, பணியிலிருந்து, 'சஸ்பெண்டும்' செய்யப்பட்டுள்ளார். அவர் மேற்கொண்ட பணி நியமனங்கள் குறித்து, விசாரணை நடந்து வருகிறது. இதை தொடர்ந்து, திருவள்ளுவர் பல்கலை, பெரியார், தமிழ் பல்கலை ஆகியவற்றில், பணி நியமனங்கள் குறித்தும், சர்ச்சை எழுந்துள்ளது.இந்த தொடர் பிரச்னைகளால், உயர்கல்வித்துறையின் மீது, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, உயர்கல்வித்துறையில் ஊழலை களையவும், முறைகேடுகளை தடுக்கவும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளார். இதற்காக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் முறைகேடு புகார்கள் குறித்தும், அதன் உண்மை நிலை குறித்தும், உயர்கல்வித்துறை அறிக்கை தாக்கல் செய்ய, அவர் உத்தரவிட்டுள்ளார்.இதற்காக, பல்கலைகளின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை நடக்கிறது. முதலில், உயர்கல்வி அமைச்சரும், செயலர், சுனில் பாலிவாலும் கூட்டத்தை நடத்த உள்ளனர். அதன்பின், கவர்னர் மாளிகையில், பல்கலை துணைவேந்தர், பதிவாளர்களுக்கு வழிகாட்டுதல் கூட்டம் நடக்கும் என, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- நமது நிருபர் -

No comments:
Post a Comment