Thursday, February 15, 2018

ஸ்டேண்டில் 'பைக் சீட்' கிழிப்பு இழப்பீடு வழங்க உத்தரவு

Added : பிப் 15, 2018 01:40

கோவை:கோவை அருகேயுள்ள அவினாசி, வேட்டுவ பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணியம், கருமத்தம்பட்டியிலுள்ள டூ வீலர் ஸ்டேண்டில், 2013, டிச., 14ல், பைக்கை நிறுத்தி விட்டு வெளியூர் சென்றார்.

திரும்ப வந்த அவர், ரசீதை காட்டி, கட்டணம் செலுத்திவிட்டு பைக் எடுத்தார். அப்போது, பைக்கின் 'சீட் கவர்' கிழிக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்தார் .இதுகுறித்து சுப்ரமணியம் கேட்ட போது, தரக்குறைவாக திட்டி அனுப்பினர்.
பாதிக்கப்பட்ட சுப்பிரமணியம், இழப்பீடு வழங்க கோரி, டூ வீலர் பைக் ஸ்டேண்ட் உரிமையாளர் மீது கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரன் அளித்த தீர்ப்பில், 'ஸ்டேண்டில் நிறுத்தப்படும் வாகனத்தை பாதுகாக்காமல், சேவை குறைபாடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, டூ வீலர் ஸ்டேண்ட் நிறுவனம், சீட் கவருக்கு ஆயிரம் ரூபாய், மன உளைச்சலுக்கு இழப்பீடாக 5,000 ரூபாய், வழக்கு செலவு தொகை 3,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024