தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை: மத்திய அரசுக்கு 4 மாதம் அவகாசம்
Added : பிப் 15, 2018 00:27
மதுரை: தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'மத்திய அரசு தகுந்த இடத்தை தேர்வு செய்து, ஜூன் 14க்குள் சாதகமான பதிலை தர வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் பல்வேறு இடங்களில், மத்தியக்குழு ஆய்வு செய்தும், எங்கு, 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைகிறது என அறிவிக்கவில்லை. தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் அமைய உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட, மத்திய சுகாதாரத் துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.இதில், '2017 டிச., 31க்குள் இறுதி முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை நிறைவேற்ற, மத்திய சுகாதாரத் துறை செயலர் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு விசாரித்தது.மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞர், 'மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட தோப்பூர் - மதுரை, பெருந்துறை - ஈரோடு, செங்கிப்பட்டி - தஞ்சாவூர், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் மற்றும் புதுக்கோட்டையில் மத்தியக்குழு ஆய்வு செய்தது. 'இவற்றில் தகுந்த இடத்தை தேர்வு செய்ய, கால அவகாசம் தேவை' என்றார்.நீதிபதிகள், 'எய்ம்ஸ் அமைய உள்ள தகுந்த இடத்தை தேர்வு செய்து, சாதகமான பதிலை, மத்திய அரசுத் தரப்பில், ஜூன் 14க்குள் தெரிவிக்க வேண்டும். 'விசாரணை, ஜூன் 26க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என, தெரிவித்தனர்.

No comments:
Post a Comment