ராமச்சந்திரா மருத்துவமனையில் 'சிமுலேட்டர்' ஆய்வு கூடம்
Added : பிப் 17, 2018 18:45
சென்னை,:''ராமச்சந்திரா மருத்துவமனை மயக்கவியல் டாக்டர்களுக்கு, 'சிமுலேட்டர்' பயிற்சி ஆய்வுக் கூடம் அமைக்கப்படும்,'' என, துணைவேந்தர் விஜயராகவன் கூறினார்.சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், மயக்கவியல் துறை கருத்தரங்கம் நடந்தது. இதில், உலக புகழ் பெற்ற மயக்க மருத்துவ துறை, சிமுலேட்டர் நிபுணர், மாகனி பூர்வாவுக்கு, சிறப்பு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், பல்கலை துணைவேந்தர் விஜயராகவன் கூறியதாவது:ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்களுக்கு, மயக்கவியல் துறையில் பயன்படும், அதிநவீன கருவியான, சிமுலேட்டர் பயிற்சி ஆய்வுக் கூடம் விரைவில் அமைக்கப்படும். இதனால், நோயாளிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தில் சிகிச்சை அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.மயக்கவியல் துறை பேராசிரியர், அருணா பரமேஷ்வரி கூறுகையில், ''ராமச்சந்திரா மருத்துவமனையின், 15 அறுவை சிகிச்சை கூடங்களிலும், உயர் துல்லிய மயக்கவியல் தகவல் மேலாண்மை தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகளுக்கு சிறப்பான பலன் கிடைக்கும்,'' என்றார்.

No comments:
Post a Comment