Sunday, February 18, 2018

சங்கிலி பறித்த சித்தா மாணவர் கைது

Added : பிப் 17, 2018 23:38

திருநெல்வேலி, நெல்லையில் பெண்களிடம் செயின்பறிப்பில் ஈடுபட்ட சித்த மருத்துவ கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார்.நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராமகிருஷ்ணமூர்த்தி 22. நெல்லை சித்த மருத்துவ கல்லுாரியில் இரண்டாம் வருடம் படித்து வருகிறார். மகாராஜநகர், என்ஜிஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்து பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் பெண்ணிடம் நகைபறிப்பில் ஈடுபட்டபோது சிக்கியுள்ளார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 50 பவுன் தங்கநகைகள் அவரிடம்இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024