கமல், ரஜினியை மக்கள் நம்பக் கூடாது: சத்யராஜ்
Added : பிப் 19, 2018 01:38
சென்னை: ''கமல், ரஜினி இருவரும், எல்லாம் தெரிந்தவர்கள் என, மக்கள் ஒரு போதும் நம்பக்கூடாது; அவர்களை தோற்கடிக்க வேண்டும்,'' என, நடிகர் சத்யராஜ் பேசினார்.
சென்னையில், நடந்த விழா ஒன்றில், அவர் பேசியதாவது: நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்திகளாகி வருகின்றன. நடிகர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்துள்ளனர்; ஏன், நானே, மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். பிரபல நடிகர்கள் என்பதால், எல்லாம் தெரிந்தவர்கள் என, அவர்களை ஒரு போதும் நம்பி விடாதீர்கள்; அவ்வாறு நினைப்பது தவறு. நடிகர்கள் அரசியலில் தோற்றால், அது, பெரிய தோல்வி அல்ல. வெற்றி பெற்றால், உங்கள் நிலைமை என்னவாகும் என, யோசியுங்கள். எனவே, நடிகர்களை அரசியலில் தோற்கடிக்க வேண்டும்.இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

No comments:
Post a Comment