Monday, February 19, 2018

'வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தல் பிரசாரம் செய்யலாமா?'

புதுடில்லி: 'வெளிநாடுகளில் வசிக்கும், இந்திய வம்சாவளியினர், இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் பிரசாரம் செய்வது, 'விசா' விதிகள் அல்லது சட்டத்தை மீறும் செயலா' என, தேர்தல் கமிஷன் எழுப்பியுள்ள சந்தேகத்திற்கு பதில் அளிக்காமல், மத்திய சட்ட அமைச்சகம், மவுனம் காத்து வருகிறது.




விதிமீறும் செயல்

கடந்தாண்டு, பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சிக்காக, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய

வம்சாவளியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். 'இது, விசா விதிகளை மீறும் செயல் ஆகாதா' எனக் கேட்டு, தலைமை தேர்தல் கமிஷனருக்கு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்எழுதினார்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி, சந்தேகத்துக்கு பதில் அளிக்கும்படி கூறியது. ஆனால், இதுவரை, மத்திய சட்ட அமைச்சகம் பதில் அளிக்காமல் மவுனம் சாதித்து வருகிறது.

இதுகுறித்து, மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய வம்சாவளியினர், நம் நாட்டில் நடக்கும் தேர்தலில் பிரசாரம் செய்வதுதொடர்பாக, எந்த கட்சியினரும் புகார் அளிக்க வில்லை. இருப்பினும்,பஞ்சாப் மாநில தேர்தல் அதிகாரி சந்தேகம் எழுப்பியதை அடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு, தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது.

நினைவூட்டல் கடிதம்:

அங்கு பதில் கிடைக்காததால், சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது. பல மாதங்கள் கடந்த பின்னும், சட்ட அமைச்சகமும் பதில் அளிக்கவில்லை. எனவே, இந்த விஷயத்தை தெளிவுபடுத்தும் படி, கடந்த மாதம், சட்ட அமைச்சகத்துக்கு, நினைவூட்டல் கடிதத்தை தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 




No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024