தஞ்சை அரசு கல்லூரியில் முறைகேடு? : மறைப்பதற்காக விடுமுறை என புகார்!
Added : பிப் 19, 2018 23:09
தஞ்சாவூர்: தஞ்சை, குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லுாரியில் நடந்துள்ள முறைகேட்டை மறைப்பதற்காகவே, ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளதாக, போராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தஞ்சாவூரில், 'குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லுாரி விடுதியில், அடிப்படை வசதிகள் இல்லை, கண்காணிப்பு கேமரா வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது' என, பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, மாணவியர், 17ம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று முதல், 26ம் தேதி வரை, ஒரு வாரத்துக்கு கல்லுாரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.நேற்று கல்லுாரிக்கு வந்த பேராசிரியர்கள், மாணவியர், விடுமுறை தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பேராசிரியர்கள் நுழை வாயிலில் அமர்ந்து, முதல்வர் திருவள்ளுவன் போக்கை கண்டிப்பதாக தெரிவித்தனர்.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:கல்லுாரிக்கு கண்காணிப்பு கேமரா வாங்கியதில் நடந்துள்ள ஊழலை மறைப்பதற்காக, துறைத் தலைவர்களிடம் ஆலோசிக்காமல், திடீரென ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. எம்.பில்., தேர்வுகள், ஒரு வாரத்தில் நடக்க உள்ள நிலையில், இப்படி திடீரென விடுமுறை அறிவித்திருப்பது சரியில்லை.மாணவியர் போராட்டத்தை, கல்லுாரி கல்வி மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு முறையாக தெரிவிக்காமல், வகுப்புகள் மற்றும் விடுதிகள் சீரமைப்பிற்காக, விடுமுறை விடுவதாக தெரிவித்துள்ளனர். முதல்வரின் தன்னிச்சையான போக்கை கண்டிக்கிறோம்.இவ்வாறு கூறினர்.கல்லுாரி நிர்வாகம் தரப்பில், 'பராமரிப்பு பணிக்காக விடுமுறை விடப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் யாருக்கும் விடுமுறை விடவில்லை. அவர்கள் கல்லுாரி உள்ளே வராமல், வளாகத்தில் அமர்ந்து சென்றால், என்ன செய்ய முடியும்' என தெரிவித்தனர்.

No comments:
Post a Comment