Tuesday, February 20, 2018

அரசியல் பாதையை தெளிவுபடுத்திய கமல்

Added : பிப் 20, 2018 00:13



தமிழகத்தில், பா.ஜ.,வை புறக்கணிப்பதன் வாயிலாக, தன் அரசியல் பாதையை, நடிகர் கமல் தெளிவுபடுத்தியுள்ளார். வரும், 21ல், தன் அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ள கமல், தான் போகவிருக்கும் பாதையை கோடிட்டு காட்டியுள்ளார். அரசியல் பயணத்தை துவங்குவதற்கு முன், பல்வேறு கட்சி தலைவர்களை, அவர் சந்தித்து வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, கேரள முதல்வர், பினராயி விஜயன், டில்லி முதல்வர், அர்விந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், நல்லகண்ணு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் ஆகியோரை சந்தித்தார். ஆனால், பா.ஜ., மூத்த தலைவர்கள் எவரையும், அவர் சந்திக்கவில்லை.நடிகர் கமல், அரசியலில், பா.ஜ.,வுக்கு எதிர் திசையில் பயணிக்கப் போவதை, இச்சந்திப்புகள் வாயிலாக உறுதி செய்துள்ளார். இதுகுறித்து, கமல் ஆதரவாளர்கள் கூறுகையில், 'பா.ஜ., மட்டுமின்றி அ.தி.மு.க.,
காங்கிரஸ் தலைவர்களையும், கமல் சந்திக்கவில்லை' என்றனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...