இருதய ஸ்டென்ட் விலை ரூ.28 ஆயிரமாக குறைப்பு
Published : 14 Feb 2018 08:20 IST
புதுடெல்லி
இருதய ஸ்டென்டின் விலை ரூ.28 ஆயிரமாகக் குறைக்கப் பட்டுள்ளது.
தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் (என்பிபிஏ) இதற்கான முடிவை நேற்று முன்தினம் எடுத்துள்ளது.
இந்தியாவில் இருதய நோய் சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் ஸ்டென்டின் விலை அதிகமாக இருந்தது. விலையைக் குறைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு என்பிபிஏவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. மேலும் இருதய நோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள், பொருட்களுக்கு கூடுதல் விலை இருப்பதாக ஏராளமான புகார்கள் என்பிபிஏவுக்கு வந்தன.
இதைத் தொடர்ந்து இருதய மருத்துவ ஸ்டென்டுகளின் (டிஇஎஸ்) விலையை ரூ.28 ஆயிரமாக என்பிபிஏ குறைத்துள்ளது. ரூ.2,300 அளவுக்கு விலை குறைக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து ரூ.29,285 என்ற விலைக்கு ஸ்டென்டுகள் கிடைக்கும். அதே நேரத்தில் மெட்டல் ஸ்டென்டுகளின் விலை ரூ.7,400லிருந்து ரூ.7,660-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வரியுடன் சேர்த்து மெட்டல் ஸ்டென்டுகளின் விலை ரூ.8,043-ஆக இருக்கும். இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த பிப்ரவரியில் மருத்துவ ஸ்டென்டுகளின் விலை ரூ.30,180-ஆக இருந்தது.

No comments:
Post a Comment