பிரதமர் மோடி இன்று சென்னை வருகை மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.#PMModi #Tamilnews
பிப்ரவரி 24, 2018, 05:30 AM சென்னை,
பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.
ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த இருக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்படுகிறது.
இதற்கான விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. கலைவாணர் அரங்கத்துக்கு எதிரேயுள்ள கார் நிறுத்தும் இடத்தில் விழா மேடை அமைக்கப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையிலும் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக அங்கு வரும் அவர் முதலில் மரக்கன்றை நடுகிறார். பின்னர் விழா மேடைக்கு வருகிறார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் இந்த விழாவில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
அதன்பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையுரை ஆற்றுகிறார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி சில பெண்களுக்கு ஸ்கூட்டரை வழங்கி, உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு அவர் விழா பேருரை ஆற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலை உரையாற்றுகிறார்.
மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபால், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா நன்றி கூறுகிறார்.
இந்த விழாவுக்கு இருசக்கர வாகனங்களை வாங்கும் ஆயிரம் பயனாளிகள் அழைக்கப்பட்டு உள்ளனர். பயனாளிகளிடம் இருந்து இருசக்கர வாகன திட்டம் தொடர்பான ஆவணங்கள் நேற்று பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டன. பயனாளிகளில் சிலருக்கு விழா மேடையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமரின் பாதுகாப்புக்காக 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உயர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள கலைவாணர் அரங்கத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள்.
நேற்று இரவில் இருந்தே கலைவாணர் அரங்கம் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் லாட்ஜ்களில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
பிரதமர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment