”காத்திருந்தார்.... கைக்கட்டியபடியே நின்றார்!” - அமைச்சரை கண்டு நடுங்கும் கலெக்டர்.
எம்.புண்ணியமூர்த்தி
க.விக்னேஷ்வரன்
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வைத்ததுதான் சட்டம். மாநகராட்சி அலுவலகமாக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருந்தாலும் சரி. 'அவரின் உத்தரவு இல்லாமல் இங்கே அணுவும் அசையாது' என்று பரவலான பேச்சு உண்டு. "அமைச்சரை பகைத்துக்கொண்டால், அதிகாரிகள் நிம்மதியாக இருக்க முடியாது” என்பது எல்லா மாவட்டங்களுக்குமான பொதுவிதியாக இருந்தாலும், கோவையில் சற்று கூடுதலாகவே தெரிகிறது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஜனவரி 31-ம் தேதி கலந்துகொண்ட நிகழ்வில் கோவை கலெக்டர் ஹரிஹரன் நடத்தப்பட்ட, நடந்துகொண்ட விதம் அதை உறுதி செய்துள்ளது.
கோவை அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனை ஆய்வு செய்வதற்காக எஸ்.பி.வேலுமணி வந்தார். கோவை 'நவ இந்தியாதான்' ஆய்வு ஸ்பாட். 11 மணிக்கு அமைச்சர் வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்ததாக 11.30 என்று நேரத்தை மாற்றினார்கள். பத்திரிகையாளர்கள் அனைவரும் 11 மணிக்கே ஆஜராகி விட்டார்கள். கலெக்டர் ஹரிஹரனும், மற்ற அதிகாரிகளும் 12.30 மணிக்கு வந்தார்கள். சற்றுநேரத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டி வந்தார். யாருக்கும் காத்திருக்காமல் வெயிலும் வேகமாக வந்துவிட்டது. மணி 1.30-ஐ நெருங்கியும் அமைச்சர் வரவே இல்லை. 'இன்னும் அஞ்சு நிமிஷத்தில் அமைச்சர் வந்துவிடுவார்' என்பதையே கிட்டத்தட்ட ஐந்துமுறை சொன்னார்கள். அடுத்ததாக அனைவருக்கும் பசியும் வந்துவிட்டது. நேரத்துக்கு சாப்பிட்டுப் பழகிய அதிகாரிகள் சிலர் நெளிய ஆரம்பித்தார்கள். வெயில் பொறுக்க முடியாத கலெக்டர், ஓர் நிழலில் அண்டி நின்று கொண்டார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக நிலைமை இப்படியே சென்றது. இருந்தது. ஒருவழியாக மதியம் 2.15 மணிக்கு வந்துசேர்ந்தார் அமைச்சர். 'ஒரு மணி நேரம் கலெக்டர் காத்திருந்தால் என்னவாம்' என்று சிலர் நினைக்கலாம். கலெக்டர் காத்திருப்பதிலோ, அமைச்சர் காக்க வைத்ததிலோகூட பிரச்னை இல்லை. சந்தர்ப்ப சூழலால் அமைச்சரால் நேரத்திற்கு வர முடியாமல் போயிருக்கலாம். ஆனால், வந்தபிறகு கலெக்டருக்கான மரியாதையைக் கொடுத்திருக்க வேண்டும்தானே! அதுவும் இல்லை.
(அமைச்சர் காரில் ஏறும்போதும், கைக்கட்டியபடியே நிற்கும் கலெக்டர்)
அமைச்சர் வந்ததும் அரசியல் புள்ளிகள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். சால்வை போர்த்தினார்கள். இறுக்கமான முகத்தோடு ஒரு ஓரமாக கையைக் கட்டியபடி நின்றுகொண்டிருந்தார் கலெக்டர். மண் பரிசோதனை செய்வதற்காக போடப்பட்ட போர்வெல்-ஐ அமைச்சர் பார்த்தார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர், ஓடிவந்து என்னென்ன பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை அமைச்சரிடம் விளக்கினார். அப்போதும் கலெக்டர் ஒதுங்கியேதான் நின்று கொண்டிருந்தார். அடுத்ததாக ஆய்வு தொடர்பான பேட்டிக்குத் தயாரானார் அமைச்சர். மீடியாக்கள் கேமராவை ஃபோக்கஸ் செய்ததும் அவரை ஒட்டியபடி, எம்.எல்.ஏ ஆறுக்குட்டியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனும் நின்று கொண்டார்கள். அமைச்சருக்கு அப்போதுதான் கலெக்டர் ஞாபகம் வந்தது. "கலெக்டர் எங்கப்பா?" என்று கூப்பிட்டு தன் பக்கத்தில் பொம்மைபோல் நிறுத்திக் கொண்டார். அல்லது அவரே அப்படித்தான் நின்றார் எனலாம். கட்டிய கையை இறக்கவே இல்லை. இறுக்கமான முகத்துடனேயே இருந்தார். அமைச்சர் பேச ஆரம்பித்ததும், சத்தம்போடாமல் நகர்ந்து வெளியே வந்து ஒரு ஓரமாக நின்று பிஸ்கெட் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் (பசி தாங்க முடியவில்லை போல!)
பெயரளவுக்குகூட ஆய்வுப் பணியை செய்யவோ அல்லது அதில் ஈடுபாடு உள்ளவரைப் போல காட்டிக்கொள்ளவோ இல்லை. அமைச்சர் பேட்டியை
முடித்ததும், கையைக் கட்டிக்கொண்டு அமைச்சரை வழியனுப்ப ஓடி வந்தார். அமைச்சர் காரில் ஏறும்வரை கட்டிய கையை கீழே இறக்கவேயில்லை கலெக்டர்.
"கோவையில் நாளுக்குநாள் பெருகிவரும் வனவிலங்குப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு முத்தரப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யச்சொல்லி, எத்தனையோ முறை கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டோம். ஆனால் அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை. எந்த மக்கள் பிரச்னையிலும் இறங்கி வேலை செய்வதில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவைக்கூட அவர் மதிப்பது கிடையாது. மாவட்டத்தில் ஆக்கப்பூர்வமான எந்தப் பணியும் நடப்பதில்லை. இப்படி ஒரு கலெக்டரை என் சரித்திரத்திலேயே பார்த்ததில்லை" என்கிறார் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் கந்தசாமி.
சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ-வான கார்த்திக், "இந்த கலெக்டர் எந்த வேலையும் செய்வது கிடையாது. தான்தான் கோயம்புத்தூரின் ஆட்சியர் என்பது அவருக்குத் தெரியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அமைச்சரைக் கண்டாலே கலெக்டர் நடுங்குகிறார். அந்த அளவுக்கு அதிகாரிகளை மிரட்டி வைத்திருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. இப்படியான கலெக்டர் நேர்மையாக மக்கள் பணி செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்" என்கிறார்.

No comments:
Post a Comment