Monday, February 19, 2018

மகன் ஜில்லா கலெக்டர் என்றாலும் எளிமை!- வேலாத்தாளின் அடையாளம் 
 
சி.ய.ஆனந்தகுமார் தே.தீட்ஷித்

கடந்த சில தினங்களுக்கு முன்புவரை காதில் தொங்கட்டானும், ரவிக்கை போடாத சேலையில் பக்கா கிராமத்து சாயலில் இருந்த 85 வயது வேலாத்தாள், திருச்சிவாசிகளுக்கு பரிட்சயமில்லை. ஆனால், கடந்த 14-ம் தேதி அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியும் அவரின் புகைப்படமும் திருச்சி மாவட்டத்தில் வைரலானது.



மகன், திருச்சி ஜில்லாவுக்கே கலெக்டர். ஆனால் அவரது தாயும், தந்தையும் அவர்களின் ஓட்டு வீட்டு வாசலில் எளிமையாக அமர்ந்துகொண்டிருக்கும் புகைப்படம்தான் அது. எளிமையான சூழலில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி, அவரது தாயார் மற்றும் குடும்பம் சகிதமாக எடுத்த புகைப்படம்குறித்தும், அந்தத் தாயின் எளிமைகுறித்தும் திருச்சி மாவட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், .அதிகாரம் உள்ள பதவியில் இருந்தாலும், எளிமையான சூழலில் வாழ்ந்த விதம்குறித்த பதிவுகளை வைரலாக்கிவருகின்றனர்.


மேலும், திருச்சி மாவட்ட கலெக்டரின் தாயாரின் இறுதிச்சடங்குக்குச் சென்ற பலர், அந்தக் குடும்பத்தின் எளிமையையும் தாய்ப் பாசத்தையும் பகிர்ந்துகொண்டனர். 'ஆரம்பத்தில் தனது 4 குழந்தைகளுக்காக உழைக்க ஆரம்பித்த வேலாத்தாள், அவரின் மகன் கலெக்டராகவும், தாசில்தாராகவும், கூட்டுறவு தணிக்கைத்துறை அதிகாரியாகவும் பதவிக்குப் போனபோதும் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல், துளியும்  பழைமை மறவாமல், எளிமை குறையாமல், அவர்களின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தில் உள்ள அவர்களின் பூர்வீகமான பழைய ஓட்டு வீட்டில் வாழ்ந்து மறைந்துள்ளார்.


 எளிமையாக வாழ்ந்த வேலாத்தாள், பிள்ளைகள் எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் துளியும் ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்தது, மகன் கலெக்டர் ஆனாலும் அவர்கள் வீட்டு திண்ணையில் சிம்பிளாக எடுத்துக்கொண்ட புகைப்படம், மகன்களின் பதவியைப் பயன்படுத்தி, பணம் சுருட்டவும், பகட்டு வாழ்க்கைக்கும் ஆசைப்படும் பலருக்கு மத்தியில், வேலாத்தாள் போன்ற அம்மாக்கள் வாழ்வதால்தான், இவ்வுலகம் இன்னும் இயங்குகிறது. பிள்ளைகளும் அவர்களின் அம்மாமீது அவ்வளவு பாசமாக இருந்துள்ளார்கள்' எனப் புகழ்கிறார்கள்.

No comments:

Post a Comment

No deadline extension leads to loss of 50 MBBS seats

No deadline extension leads to loss of 50 MBBS seats  TIMES NEWS NETWORK  30.10.2024  Chennai : Union govt has refused to extend the deadlin...