‘என் நண்பரோட செருப்பைக் காணோம்!’
Published : 09 Feb 2018 14:01 IST
வி.ராம்ஜி
சில மாதங்களுக்கு முன்பு, ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ என்றொரு படம் வந்ததுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. இந்த திடீர் நினைப்புக்குக் காரணம்... ‘என் நண்பனோட செருப்பைக் காணோம்!’
ஆமாம்... என் நண்பனின் ஒரு செருப்பு தொலைந்துவிட்டது.
‘இதென்ன... ஊர்ல உலகத்துல நடக்காததா. செருப்பு காணாமப் போறது சகஜம்தன். செருப்பு திருடு போறதும் ரொம்ப ரொம்ப சகஜம்தான்’ என்று சொல்லலாம்.
ஆனால் இந்த விஷயத்தை, விட்டேத்தியாக விட்டுவிட முடியவில்லை.
போன வாரம் கூட, உதயநிதி ஸ்டாலின் நடித்து, பிரியதர்ஷன் இயக்கிய ‘நிமிர்’ படம் வந்திருந்தது. தேவையே இல்லாமல் ஒரு சண்டையை விலக்கப் போன உதயநிதிக்கு அடியும் உதையும் கிடைக்க, ஊர்மக்கள் மத்தியில் அவமானப்பட்டு குறுகிப் போய் நிற்பார். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடக்கும் செருப்பை எடுத்து வந்து அவர் காலின் கீழ் தர, எடுத்து வீசியெறிவார். ‘எல்லார்க்கு முன்னாடியும் இதேபோல இந்த ஆளை அடிக்கற வரைக்கும் செருப்பு போடமாட்டேன்’ என்று சபதம் போட, இடைவேளை போடுவார்கள்.
அடச்சே... என்ன இது... செருப்பு பற்றிய படத்தலைப்பும் படமும் ஞாபகத்துக்கு வருகிறதே!
கடவுளின் சந்நிதியில் இருக்கும் போது,
வாசலில் அவிழ்த்து விட்டு வந்த
செருப்பு காணாமல் போகாமல் இருக்க
பிரார்த்தனை ஓடியது
எனும் யாரோ எழுதிய கவிதை, அப்படியே செருப்புக்கும் நமக்குமான பந்தத்தை பறைசாற்றுகிறது.
இப்போது, காதலைச் சொல்ல, செல்போன், மெசேஜ், முகநூல் என ஏகப்பட்ட உபகரணங்கள் இருக்கின்றன. அப்போது வாயுள்ள புள்ளைதான் பொழைக்கும். இல்லையா... கடிதப் பகிர்வு. அதுவும் கடிதத்தை நேரடி டெலிவரி செய்யவேண்டும். அதாவது நேருக்கு நேர் நின்று கொடுக்கவேண்டும்.
‘செருப்பு பிஞ்சிரும்’ என்பதுதான் பெண்களின் ரெடிமேட் பதில். இதற்காகவே அந்தப் பெண் செல்லும் கோயிலைப் பார்த்து வைத்துக் கொள்வார்கள். கோயிலுக்குள் இருக்கும் போது, நேரடியாகச் சொல்லிவிடுவது... எழுதி வைத்திருக்கும் கடிதத்தைக் கொடுத்துவிடுவது! ‘கோயில்ல போய் காதல் பத்தி...’ என்று யாராவது கேட்டால், ‘இது தெய்வீகக் காதல்ங்க’ என்று சொல்லி, எஸ்கேப் ஆகிவிடலாம்.
இன்னொரு முக்கியமான எஸ்கேப். ’செருப்பு பிஞ்சிரும்’ என்று அந்தப் பெண் சொல்லமுடியாது. அவள்தான்... செருப்பை கழற்றிவிட்டுத்தானே கோயிலுக்குள் வந்திருக்கிறாள்.
அப்புறம் ஒரு விஷயம்...
முன்பெல்லாம், வாரத்துக்கு இருமுறையோ மாதத்துக்கு இருமுறையோ... திடீர்திடீரென்றோ... குறிப்பாக மழைக்காலங்களில், செருப்பு தைக்கும் தொழிலாள அண்ணன்களோ தாத்தாக்களோ நம் வீதிகளுக்கே வருவார்கள். அவர்கள் வந்தால் தைக்கவேண்டும் என்று எல்லார் வீடுகளிலும் நான்கைந்து ஜோடி செருப்புகள் இருக்கும்.
அதேபோல், ஊரில் ஐந்தாறு முக்கியமான பாயிண்டுகளில், நமக்காகவே, நமக்கு உழைப்பதற்காகவே அவர்கள் கடைவிரித்திருப்பார்கள். நாமும் பலமுறை குத்திக்குத்தி தைத்துத் தைத்து தேயத் தேயப் போட்டுக்கொண்டே சுற்றுவோம். ஒருகட்டத்தில்... டாக்டர்கள் உதடு பிதுக்குவது போல, இவர்கள் ‘இனிமே தைக்கவே முடியாதுங்க. அவ்ளோதான்’ என்று சொல்ல, பிரிய மனமே இல்லாமல் அந்தச் செருப்பை ஏக்கமாகப் பார்த்துவிட்டு, வேறு செருப்பு வாங்கி, அது கடித்து, கொஞ்சம் விந்திவிந்தி நடந்து, ‘பழைய செருப்பு சூப்பர் செருப்புய்யா...’ ரெண்டே கால் வருஷம் உழைச்சிச்சு’ என்று செருப்புக்கும் நமக்குமான பந்தம், நம் காலோடு மட்டுமல்ல, மனதோடும் பின்னிப் பிணைந்தது!
’ஏங்க... உங்க நண்பர் செருப்பு எப்படி காணாமப் போச்சு’ என்று கேட்கிறீர்கள். புரிகிறது.
கவிஞர் மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப்பூக்கள்’ படித்திருக்கிறீர்களா. அந்தப் புத்தகத்தில், ’செருப்புடன் ஒரு பேட்டி’ எனும் கவிதை வெகு பிரபலம். செருப்பு, தன் ஆதங்கத்தையும் வேதனையையும் சொல்லும் அந்தக் கவிதை, கிட்டத்தட்ட செருப்பால் அடித்த மாதிரி நமக்கு உறைக்கும்!
சரி... நண்பன் செருப்பு மேட்டருக்கு வருவோம்.
அதாவது, என் நண்பர் வீட்டில் இருந்து கிளம்பி, பஸ் ஸ்டாப்புக்கு வந்துகொண்டிருந்த போது. வழியில் நகை வேலை செய்யும் ஆசாரி அண்ணன் கடைக்குச் சென்று ஒரு ஐந்து நிமிடம் பேசிவிட்டு, நலம் விசாரித்துவிட்டு பஸ் ஏறுவது வழக்கமாம். ஒரே ஊர்க்காரர்கள் வேறு!
அப்படித்தான் ... செருப்பைக் கழற்றிவிட்டு, உள்ளே சென்று, நகை வேலை செய்யும் அண்ணனுடன் பேசிக்கொண்டிருந்தார். நடுநடுவே கஸ்டமர்கள் வேறு வந்து வந்து சென்றனர். ‘சரி... நீங்களும் பிஸியா இருக்கீங்க. நானும் வேலைக்குக் கிளம்பறேன்’ என்று சொல்லிவிட்டு, செருப்புக்குள் கால் நுழைக்கப் போனவருக்கு பிபி தாறுமாறு தக்காளி சோறானது.
‘ஏம்பா... என்ன இப்படி பதர்றே. செருப்பு காணாமப் போயிருந்தா பதறலாம்பா. அதான் இருக்குதே’ என்றார் கடைக்காரர்... வேலையைப் பார்த்துக் கொண்டே!
‘’காணாமலே போயிருந்தாக் கூட பரவாயில்லீங்க. இதென்னங்க கூத்து’ என்று நண்பர், திக்கித் திணறி, நம்பவே முடியாத நிலையில், கண்ணைக் கசக்கி, செருப்பைப் பார்த்து, செருப்பைப் பார்த்து கண்ணைக் கசக்கி... என்று ஒருவழியாய் சொல்லி முடித்தார்.
அந்தக் கடைக்காரர் உட்கார்ந்திருந்தபடியே எக்கிப் பார்த்தார். உற்றுப் பார்த்தார். அதிர்ந்து போனார். ‘என்னய்யா இது கொடுமை’ என்றார். சட்டென்று எழுந்து வந்து செருப்புக்கு அருகே நின்று பார்த்தார்கள். என் நண்பரின் கருப்பு நிற செருப்பு... இடது கால் செருப்பு இருந்தது. அந்த செருப்புக்கு ஜோதியாக அதாவது வலது காலில் போட்டுக் கொள்ளும் செருப்பு... அதாவது பிங்க் கலரிலான செருப்பு இருந்தது. இது ஆச்சரியம்... அதிர்ச்சி என்ன தெரியுமா... அந்த பிங்க் கலர் செருப்பு... பெண்கள் அணிந்து கொள்ளும் செருப்பு.
அதாவது, கடைக்கு வந்த யாரோ ஒரு பெண்... தன்னுடைய பிங்க் கலர் செருப்புடன் நண்பரின் செருப்பைப் போட்டுக் கொண்டு போய்விட்டார்.
அடுத்து என்ன செய்வது எனும் புரியாத நிலையில்... நண்பர்... பிரமை பிடித்து நின்றார். உடனே நகைக்கடைக்கார அண்ணன், ‘ஒருவேளை வீட்லேருந்து வரும்போதே இப்படி போட்டுட்டு வந்துட்டியா’ என்று கேட்டார். அப்படீன்னா தெரியாதா எனக்கு. சரி... கேக்கறேன் என்று மனைவிக்கு போன் போட்டு, விஷயத்தைச் சொல்லி, ‘அங்கே என்னோட இன்னொரு கால் செருப்பு இருக்குதானு பாரு’ என்று சொல்ல... எதிர்முனையில் இருந்து செம டோஸ்!
இப்போது செருப்பைக் காணோம் என்பதுடன் மனைவியின் டோஸ் வேறு சேர்ந்து கொள்ள... செருப்பில்லாத காலுடன் வந்து, 285 ரூபாய்க்கு செருப்பு வாங்கிப் போட்டுக் கொண்டு வந்தார், அலுவலகத்துக்கு!
வந்தவர், இந்தப் போட்டோவைக் காட்டி, சிரிக்கச் சிரிக்கச் சொன்னார், செருப்பு மாறிய கதையை. அப்போது துக்கமாகவும் வேதனையாகவும் இருந்தது... இப்போது வெறும் சம்பவமாகவும் சிரிப்பாகவும் மாறிப்போனது!
‘ஏங்க... நண்பரோட இன்னொரு செருப்பை எங்காவது பார்த்தா, கொஞ்சம் சொல்லுங்க. போன் லைன் கிடைக்கலேன்னாலும் பரவாயில்ல.. உங்க செருப்பு தேயத்தேய நடந்து வந்தாவது சொல்லுங்க! புண்ணியமாப் போகும்!
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

No comments:
Post a Comment