Friday, October 12, 2018

ஏர் இந்தியா விமானம் சுற்றுசுவர் மீது மோதல்: 130 பயணிகள் உயிர் தப்பினர்

Updated : அக் 12, 2018 06:48 | Added : அக் 12, 2018 06:24


திருச்சி: திருச்சியில் இருந்து துபாயிக்கு புறப்பட்ட விமானம் விபத்திற்குள்ளானது. திருச்சியில் இருந்து இன்று அதிகாலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 130 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தனது கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தில் இருந்த ஏடிசி டவர் (போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதனை தொடர்ந்து விமானம் மும்பைக்கு சென்றது.

விபத்து தவிர்ப்பு

4 மணி நேரத்திற்கு பின் மும்பை யில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டாலும் 130 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விரிவான விசாரணைக்கு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

சம்பவம்நடந்த இடத்தில் தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024