காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 196 பேர் விண்ணப்பம்
Added : டிச 18, 2018 00:29
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, ஓய்வு பெற்ற, 'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பல்கலை மானிய குழு முன்னாள் துணை தலைவர் தேவராஜ் உட்பட, 196 பேர் விண்ணப்பித்துள்ளனர்.காமராஜ் பல்கலைக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலை முன்னாள் துணைவேந்தர் நாகேஸ்வரராவ் தலைமையில், முன்னாள் துணைவேந்தர்கள் அனந்தகிருஷ்ணன், ஓஜா இடம்பெற்ற தேடல் குழு, டிச., 14 வரை விண்ணப்பங்கள் பெற்றது.இப்பல்கலைக்கு தொடர்புடைய, 38 பேராசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஓய்வு பெற்ற, 'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பல்கலை மானிய குழு முன்னாள் துணை தலைவர் தேவராஜ் உட்பட, 196 பேர் விண்ணப்பித்துள்ளனர்.தேடல் குழுவின் வெளிப்படை தன்மை காரணமாக, முதன் முதலில் இணையதளத்தில் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.அதே நேரம், குற்றப் பின்னணி உள்ளோரும், ஆவலுடன் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள இப்பல்கலையைச் சேர்ந்த சிலருக்கு, குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. சிலர், வழக்கில் இருந்து விடுபட்டோராக உள்ளனர். சிலர், நிதி முறைகேடு புகாரில் சிக்கி, விசாரணை வளையத்திற்குள் உள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.பேராசிரியர்கள் கூறுகையில், 'இப்பல்கலைக்கு எவ்வித தொடர்பும் இல்லாத, தகுதி மற்றும் நேர்மையான, வளர்ச்சியில் அக்கறையுள்ளவரை துணைவேந்தராக தேர்வு செய்ய, கவர்னர் புரோஹித் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
No comments:
Post a Comment