Friday, January 16, 2015

உலக நாடுகளில் அதிக விடுமுறை கொண்ட நாடு இந்தியா!

ChennaiOnline

மும்பை,ஜன.16 (டி.என்.எஸ்) உலகிலேயே அதிக பொது விடுமுறை தினங்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

பிரபல ஆன்லைன் டிராவல் வெப்ஸைட் வீகோ நடத்திய ஆய்வில், பிலிப்பைன்ஸ், சீனா, ஹாங் காங், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகளை காட்டிலும் இந்தியா அதிக விடுமுறைகளை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலக நாடுகளின் விடுமுறை தின பட்டியல் பின்வருமாறு:

இந்தியா - 21
பிலிப்பைன்ஸ் - 18
சீனா, ஹாங்காங் - 17
தாய்லாந்து - 16
மலேசியா, வியட்நாம் - 15
இந்தோனேசியா - 14
தைவான், தென்கொரியா - 13
சிங்கப்பூர் - 11
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து - 10
செர்பியா, ஜெர்மனி - 9
பிரிட்டன், ஸ்பெயின் - 8
மெக்ஸிகோ - 7

ஓர் ஆண்டுக்கு 21 நாட்களை பொது விடுமுறை தினங்களாக கொண்டுள்ள இந்தியா, ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளை கொண்டு கணக்கிட்டால் இன்னும் அதிகமாக கூட வரலாம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...