சென்னை: அண்ணா பல்கலைக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பி.இ., - பி.டெக்., படிப்புக்கான பொது கவுன்சிலிங், ஜூலை, 1ம் தேதி துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்குட்பட்ட, 590 பொறியியல் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி, நேற்று துவங்கியது. சென்னையில், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலையில், வரும், 29ம் தேதி வரையிலும், மற்ற, 59 மையங்களில் வரும், 27ம் தேதி வரையிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும். 29ம் தேதி மாலை, 6:00 மணிக்குள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்நிலையில், ரேண்டம் எண், தர வரிசைப் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தேதியை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
* ஜூன், 15 - 'ரேண்டம்' எண்.
* ஜூன், 19 - 'கட் - ஆப்' மற்றும் ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்.
* ஜூன், 28 - விளையாட்டுப் பிரிவுக்கான கவுன்சிலிங்
* ஜூன், 29 - மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங்.
* ஜூலை, 1 - பொது கவுன்சிலிங் துவக்கம்.
* ஜூலை, 31 - அனைத்துப் பிரிவினருக்கும் கவுன்சிலிங் முடிவு. இந்தப் பட்டியலில் உள்ள சேர்க்கை நடவடிக்கைகளில், தேவைக்கேற்ப தேதி மாற்றங்கள் இருக்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment