Wednesday, May 6, 2015

நாளை பிளஸ் 2 'ரிசல்ட்' : 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

சென்னை: தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கியது; மார்ச், 31ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.43 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், நாளை காலை 10:00 மணிக்கு வெளியாகிறது.
இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தேர்வர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு விவரத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை பாட வாரியாக மதிப்பெண்களுடன், குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிகள் மூலமும் மதிப்பெண்களுடன் முடிவுகளை அறியலாம்.இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் முதன்முறையாக அறிமுகமாகிறது. தலைமை ஆசிரியரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தங்கள் பள்ளிகளில், வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின், தலைமை ஆசிரியர் மூலம் பதிவிறக்கம் செய்து பெறலாம். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் தேவைப்பட்டால், வரும் 18ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து, தாங்களே பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனர் அறிவித்து உள்ளார்.
இணையதள முகவரி
www.tnresults.nic. in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024