Saturday, May 2, 2015

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர் விடுமுறை

தற்போது பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி படித்து வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கோடை விடு முறையை கொண்டாட சென்று வந்த வண்ணம் உள்ளனர்.

இதனிடையே மே 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொழிலா ளர் தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால் இந்த விடுமுறையை கழிக்க சென்னை உள்ளிட்ட வெளியூரில் தங்கி பணியாற்றி வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். குறிப் பாக 3 நாட்கள் விடு முறையை கொண்டாட தென் மாவட்டங் களுக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதில் அதிகப்படியான வாகனங்கள் நேற்று காலை 6 மணி முதல் விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றன. இதனால் வாகனங்களுக்கு விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் வரி வசூலிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுங்கச்சாவடியில் இருந்து சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இந்த போக்குவரத்து நெரி சலை சரிசெய்ய சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் சென்னையில் இருந்து தென்மாவட்டங் களுக்கு செல்லக்கூடிய 6 வழிப் பாதையாக இருந்ததை கூடுதலாக 2 வழிகளை ஏற்படுத்தி 8 வழிப்பாதையாக திறந்து விட்டனர். இதன் மூலம் போக்குவரத்து ஓரளவு சீரானது. இருப்பினும் அதிகள வில் வாகனங்கள் வந்ததால் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அதன் பின்னரே படிப்படியாக போக்குவரத்து சீரானது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024