Saturday, May 2, 2015

வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருவது குறைந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலாப் பயணிகள்

குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால் வலசைப் பறவைகள் வரத்து குறைந்து, வெறிச்சோடி காணப்படும் வேடந்தாங்கல் சரணாலயம்.

வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் இல்லாததால், சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் வருகை முற்றிலும் நின்றுவிட்டது. அதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின் றனர். சரணாலயத்தை மூடுவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என சரணாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந் தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சியில் 73 ஏக்கரில் பரந்து விரிந்து காணப் படும் ஏரியின் நடுவே அடர்ந்த மரங்களுடன் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந் துள்ளது. இங்கு நிலவும் இதமான தட்பவெப்பம் மற்றும் சூழலைத் தேடி வலசை வரும் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன.

ஆண்டுதோறும் நவம்பர் மாதத் தில் சீசன் தொடங்கும். அப்போது நைஜீரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வருகின்றன. ஏரியில் உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்து பிறகு குஞ்சுகளையும் அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பு கின்றன. அவ்வாறு வரும் வெளி நாட்டு பறவைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகை யில் நவம்பர் மாதத்தில் சரணா லயம் திறக்கப்படும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகிழக்கு பருவ மழை சிறிதளவு பெய்ததால், பறவை களுக்கு ஏற்ற இதமான தட்பவெட் பம் காணப்பட்டது. வெளிநாட்டு பறவைகளும் வரத் தொடங்கின. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி சரணாலயம் திறக்கப்பட்டது.

ஆனால், வேடந்தாங்கல் சரணாலய ஏரியின் நீர் ஆதாரமாக கருதப்படும் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இத னால், சரணாலயத்தில் தற்போது பறவைகளே இல்லை என்ற நிலை யுள்ளது. பறவைகளை காணவரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத் துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து, சரணாலய வட் டாரங்கள் கூறியதாவது: மழை சீசன் தொடங்கியதும் வழக்கம் போல பறவைகள் வந்தன. ஆனால், ஏரிக்கு தண்ணீர் வரத்து இன்றி நாளுக்கு நாள் நீர் மட்டம் குறைந்ததனால், சரணாலயத்தில் தங்கியிருந்த பறவைகள் வேறு இடங்களுக்கு சென்றன. ஏரியில் தண்ணீர் நிரம்பினால் மட்டுமே மீண்டும் சரணாலயத்துக்கு பறவைகள் வரும் நிலை உள்ளது.

கடந்த ஆண்டு இதே சீசனில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பறவைகள் வரை தங்கியிருந்தன.

இதுகுறித்து, சுற்றுலாப் பயணி கள் சிலர் கூறியதாவது: ஆண்டு தோறும் பள்ளி விடுமுறை நாட் களில், இங்கு வந்து வெளிநாட்டு பறவைகளை கண்டு ரசிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சரணாலயத்தில் முற்றிலும் பறவை களே இல்லை. இதனால், நாங்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தோம். பற z வைகள் இல்லாதது தொடர்பாக, அரசு அறிவிப்பு வெளியிட்டிருந் தால், வேறு ஏதேனும் சுற்றுலா பகுதிக்கு சென்றிருப்போம் என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த வேடந்தாங் கல் பறவைகள் சரணாலய வனச் சரகர் முருகேசன் கூறியதாவது: ‘பறவைகள் இல்லை என்றாலும் சரணால யத்தையாவது சுற்றி பார்த்து செல்கிறோம் என சுற்றுலாப் பயணி கள் கூறுகின்றனர். இங்கு வரு வோர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லக்கூடாது என்பதற்காக சரணாலயத்தை மூடாமல் வைத்துள் ளோம். எனினும், சரணாலயத்தை மூடுவது தொடர்பாக உயர் அதி காரிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம். விரைவில் அறிவிப்பு கள் வெளியாகும்’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024