Monday, May 11, 2015

அண்ணாமலைப் பல்கலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் (M.B,B.S., B.D.S), பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை (B.sc Agri and B.sc Horticulture) படிப்புகளுக்கான 20115-16 ஆண்டிற்கான அனுமதி சேர்க்கை கையேடு மற்றும் விண்ணப்ப விற்பனையை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா மாணவி ஒருவருக்கு விண்ணப்பத்தை வழங்கி
ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளரும், வேளாண்புல முதல்வருமான முனைவர் ஜே.வசந்தகுமார், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ரத்தினசாமி, ஸ்ரீமாலினி, மருத்துவப்புல முதல்வர் டாக்டர் பிரசாத், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி மற்றும் அனைத்து புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

மே 14 முதல் விண்ணப்பங்கள்: விண்ணப்பங்களை அண்ணாமலைநகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைதூரக்கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கு ரூ.1500 செலுத்தியும், பிஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பிற்கு ரூ.800 செலுத்தியும், எஸ்சி., எஸ்டி பிரிவினர்
ரூ.400 செலுத்தியும் வருகிற மே 14-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

அஞ்சல் மூலம் விண்ணப்பம்: அஞ்சல் மூலம் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் விண்ணப்பம் பெற விரும்புவர்கள் ரூ.1550-ம் (ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) மற்றும் பிஎஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை விண்ணப்பம் பெற விரும்புவர்கள் ரூ.850-ம், எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ.450-ம் (ரூ50 அஞ்சல் கட்டணம் சேர்த்து சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை (Demand Draft) பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (Registrar, Annamalai University) என்ற
பெயரில் எடுத்து பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, சிதம்பரம் என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024