Monday, May 11, 2015

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு தனி, தனியே விண்ணப்பிக்க வேண்டும்: பல்கலை நிர்வாகி

மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் அனுமதி சேர்க்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தது: 2015-16 ஆண்டில் அண்ணாமலைப் பல்கலையில் எம்பிபிஎஸ் 150 இடங்களும், பிடிஎஸ் 100 இடங்களும், பிஎஸ்சி வேளாண்மை 1000 இடங்களும், பிஎஸ்சி தோட்டக்கலை 70 இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை செய்யப்படுவார்கள். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே அனுமதி சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழகஅரசின் இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள், கலந்தாய்வு விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மருத்துவம் படிப்பிற்கு தனியாகவும், பல் மருத்துவப் படிப்பிற்கு தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பிற்கும் தனி, தனியே கலந்தாய்வு நடத்தப்படும் என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கட்-ஆஃப் விபரம்: எம்பிபிஎஸ் பொது (OC)- 197.75, பிற்படுத்தப்பட்டோர் (BC)- 197.05, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)- 196.25, ஆதிதிராவிடர் (SC)- 192.25. பிடிஎஸ் கட்-ஆஃப்: பொது (OC)- 195.50, பிற்படுத்தப்பட்டோர் (BC)- 190.00, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)- 185.75, ஆதிதிராவிடர் (SC)- 178.25. பிஎஸ்சி வேளாண்மை கட்-ஆஃப்: பொது (OC)- 188.50, பிற்படுத்தப்பட்டோர் (BC)- 182.05, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)- 183.25, ஆதிதிராவிடர் (SC)- 172.05.

கவர்ச்சிகரமான மாணவர் சேர்க்கை கையேடு: வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ளது போல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஇ, பிஎஸ்சி வேளாண்மை ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பத்துடன் அனுமதி சேர்க்கை கையேடு ஆயில் பேப்பரில், மாணவ, மாணவியர்கள் எளிதில் புரிந்து கொண்டு தாங்களே விண்ணப்பித்தை பூர்த்தி செய்யும் வகையில் கையேடு அச்சடிக்கப்பட்டு விண்ணப்பத்துடன் வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் மற்றும் அனுமதி சேர்க்கை குறித்த விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in பார்த்து தெரிந்து கொள்ளலாம். auadmission2015@gmail.com மற்றும் பல்கலைக்கழக உதவி மைய தொலைபேசி எண்கள் 04144- 238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024