Friday, May 8, 2015

ஒன்றரை கோடி கொடுத்தும் வேட்டி விளம்பரத்திற்கு 'நோ' சொன்ன ராஜ்கிரண்!

சினிமாவில் ஒருபுறம், விளம்பரம், வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள் என வரும் வாய்ப்புகள் எதையும் விட்டு வைக்காமல், கோலிவுட் நடிகர், நடிகைகள் கோடிகளில் கல்லாக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், ஒன்றரை கோடி ரூபாய் வரை தருவதாக சொன்னபோதிலும் வேட்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.

அதற்கு அவர் கூறியுள்ள காரணம்தான் நெகிழ வைக்கிறது.

இந்த வாரம் ஆனந்த விகடனில் அவர் அளித்துள்ள பேட்டியில் இது தொடர்பாக கேட்கப்பட்டுள்ள கேள்வியும், பதிலும் வருமாறு:
விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்?

''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.

'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க. 'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024