’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அரசியல் ஆளுமை மிக்க தலைவியான ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி இல்லத்தில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சென்னை அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மீது படை வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அரசியல் ஆளுமை மிக்க தலைவி ஜெயலலிதாவின் உடல் மீது மூவர்ண தேசிய கொடியும் அவருக்கு பிடித்தமான பச்சை நிற பட்டுப்புடவை போர்த்தி கண்ணுறங்கிறார்.
’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய வீரமங்கையின் உடல் அவரது மக்களின் கண்ணீர் கடலில் மிதந்து வருகிறது. அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள், திரையுலகினர் என வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment