Sunday, May 7, 2017

பழநிக்கு போறீங்களா? ஆட்டோக்கள் ஜாக்கிரதை

பதிவு செய்த நாள் 06 மே2017 20:05

பழநி, பழநியில் சில ஆட்டோக்களில் பயணியரிடம் கட்டணக் கொள்ளை நடக்கிறது. ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் இருந்து, 2 கி.மீட்டரில் உள்ள மலைக்கோவிலுக்கு, 80 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.
தற்போது கோடை விடுமுறையால் பழநி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி, ஆட்டோக்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளன.

 ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் இருந்து, 2 கி.மீட்டருக்குள் உள்ள மலைக்கோவிலுக்கு, 80 ரூபாய் வசூலிக்கின்றனர்.

ரயில் வரும் நேரங்களில், அரசு பஸ் பெயரளவுக்கு இயக்கப்படுவதால், வெளியூர் பயணியரிடம் இரவு நேரத்தில், 150 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
திருப்பதியில் உள்ளது போல, பழநி பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மலைக்கோவில் ரோப்கார், வின்ச் ஸ்டேஷன் வரை வேன்களை
இயக்கலாம்.

ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலுக்கு செல்ல கட்டணம் நிர்ணயித்து, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.05.2025