Tuesday, May 9, 2017

'நீட்' தேர்வு வினாத்தாளில் குழப்பம்

பதிவு செய்த நாள் 09 மே2017 02:10


மதுரை: 'நீட்' தேர்வுக்கான தமிழ், ஆங்கில வினாத்தாள்கள் வெவ்வேறு கேள்விகளை கொண்டிருந்ததால் பெற்றோர், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, 'நீட்' தகுதித் தேர்வினை 11 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 85 ஆயிரம் பேர் எழுதினர்.

இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பத்து மொழிகளில் இத்தேர்வு நடத்தப்பட்டது.


இந்நிலையில், 'நீட்' தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளும், ஆங்கில வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளும் வெவ்வேறு கேள்விகளை கொண்டிருந்தது.
பெற்றோர் கூறியதாவது: இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கேள்விகளை கொண்டு மாணவர்களின் திறனறிந்து, அதன்படி அவர்களை மருத்துவ படிப்பில் சேர்ப்பதுதான் 'நீட்' தேர்வின் நோக்கம். ஆனால், எழுதும் மொழியை பொறுத்து வெவ்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது, என்றனர்.

தமிழ் மொழியை தேர்வு செய்திருந்தவர்களின் வினாத்தாளில் தமிழ் கேள்விகளுடன் அதன் ஆங்கில ஆக்கம் இடம் பெற்றிருந்தது. ஆங்கில மொழியை தேர்வு செய்தவர்களின் வினாத்தாளில் ஆங்கில கேள்விகளுடன் அதன் ஹிந்தி ஆக்கம் இடம் பெற்றிருந்தது.

இந்த இரு வகை வினாத்தாள்களிலும், மொழி வேறுபாடு இருந்தாலும், ஒரே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால் குழப்பம் எழுந்திருக்காது.
தற்போது கேள்விகள் மாறுபட்டிருப்பதால், தங்களுடைய வினாத்தாள் கடினமாக அமைந்து விட்டதாக இரு தரப்பினரும் கூறி வருவது பிரச்னையை உருவாக்கியுள்ளது.



Advertisement

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...