உஷ்... சொல்லாதே யாரும் கேட்டால்' : மருத்துவ கவுன்சில் பரம ரகசியம்
பதிவு செய்த நாள் 09 மே2017 02:19
மதுரை: விதிமீறலில் ஈடுபட்டுதண்டனை பெற்ற டாக்டர்களின் விபரத்தை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்.டி.ஐ.,) கேட்கப்பட்டது. 'இத்தகவல் டாக்டர்களின் உரிமையை பாதிக்கும் என்பதால் தர முடியாது' என இந்திய மருத்துவ கவுன்சில் பதில் அளித்துள்ளது.
டாக்டர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதுடன், அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை கவுன்சில் உருவாக்குகிறது. அரசு டாக்டர்கள் பணி நேரத்தில் சொந்த'கிளினிக்கில்' சிகிச்சை அளித்தல், தவறான சிகிச்சை, தவறான மருந்துகள் பரிந்துரைத்தல் போன்ற புகார்கள் மீது நடவடிக்கை
எடுக்கிறது.ஆனால், அளிக்கப்படும்புகார்களை விசாரணை என்ற பெயரில் அதிக நாட்கள்இழுத்தடிப்பதாகவும், சில டாக்டர்கள் மீது மட்டும் 'கண்துடைப்பு' நடவடிக்கை எடுத்துவிட்டு, மற்றவர்களை காப்பாற்றி வருவதாகவும், கவுன்சில் மீது சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்புகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2011- 2016ல் விதிமீறலில் ஈடுபட்டு, தண்டனை பெற்ற டாக்டர்களின் எண்ணிக்கை, பெயர், தவறு மற்றும் தண்டனை உள்ளிட்ட விபரங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது.அதற்கு கவுன்சில், 'இத்தகவல் மூன்றாம் நபர் குறித்தது. அதிக பக்கங்களை கொண்டது. டாக்டர்களின் உரிமையை பாதிக்கும். எனவே தகவல் தர முடியாது' என பதிலளித்துள்ளது.
ஆனால், பிற அரசு துறைகளில், தண்டனை பெற்ற ஊழியர்களின் விபரங்களை எளிதில் பெறலாம். உள் நோக்கத்துடன், ஒருவரது சம்பளம் போன்ற தகவல்களை மட்டுமே கேட்க முடியாது. தண்டனை பெற்ற டாக்டர்களின் விபரங்களை தெரிவிக்க கவுன்சில் மறுத்திருப்பது, இந்திய மருத்துவ கவுன்சில் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாக உள்ளது.

No comments:
Post a Comment