மெட்ரோ ரயிலில் ஒரு வாரத்திற்கு 40% கட்டண சலுகை!
சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையே எட்டு கி.மீ தொலைவிலான சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவையை மே 14-ம் தேதி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த ரயில் சேவையில் காற்றோட்டத்திற்கும், சூரிய ஒளி படுவதற்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகளைப் பாதுகாக்கப் பல்வேறு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. துவக்கநாள் அன்று இந்த ரயிலில் பொதுமக்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ரயிலில் மே-15-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு 40 சதவீதம் டிக்கெட் கட்டணச் சலுகை அளிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டணச் சலுகை சரியாக ஒரு வாரத்துக்கு அமலில் இருக்கும் எனவும் பொதுமக்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாகப் பயணிகள் ஏற்கெனவே புகார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
No comments:
Post a Comment