அரசின் மெத்தனமும், ஊழியர்கள் போராட்டமும்! - அவதியுறும் மக்கள்!
VIKATAN
13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை
வழங்குதல் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன், போக்குவரத்துத்
தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், கடந்த மார்ச் 7, மே 4-ம்
தேதிகளில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்தப்
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையொட்டி மே 15-ம் தேதி முதல்
வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். ஆனால், முன்கூட்டியே பேருந்து
ஓட்டுநர்களும், நடத்துநர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
மே 14-ம் தேதி காலை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. போக்குவரத்து ஊழியர்கள் பணிமனைகளை முடக்கினர். அதன்பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்தை தோல்வியில் முடிந்ததையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். '20 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் தொழிலாளர்களின் வைப்புத் தொகையை உடனே கேட்பது நியாமல்ல.போக்குவரத்து ஊழியர்கள் வேண்டுமென்றே நொண்டிச் சாக்கு கூறிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே 750 கோடி ரூபாய் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 500 கோடி ரூபாய் தருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைப் புரிந்து கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவே இவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.' என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பயணிகள் அவதி
போக்குவரத்து ஊழியர்கள் முன்கூட்டியே தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெளியூர்களுக்குச் செல்லமுடியாமல் பயணிகள் காத்திருந்தனர். வாரயிறுதி விடுமுறைக்குச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் பணிபுரியும் ஊர்களுக்குச் செல்ல பேருந்து இல்லாமல் தவித்தனர். ஆம்னி பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
மாற்று ஏற்பாடுகள்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அரசுப் பேருந்துகள் புறப்படாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பயணிகளின் சிரமம் கருதி ஆம்னி பேருந்து போக்குவரத்து அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். பயணிகள் அவதியுறாமல் தடுக்கும் முன்னேற்பாடு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர் அதிகாரிகளிடம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. பயணிகளின் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பேருந்துகளை இயக்குவதைத் தடுப்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஆம்னி பேருந்துகள் அதிகமான கட்டணம் வசூலித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்' என்று அமைச்சர் தெரிவித்தார். அதன்பிறகு, அண்ணாநகர் பணிமனை உள்ளிட்ட இடங்களிலும் அமைச்சர் ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
மாநகரப் பேருந்துகள் பணிமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஓய்வுபெற்ற ஊழியர்களை வைத்துப் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். பஸ் ஸ்டிரைக்கை முன்னிட்டு இன்று (மே 15) முடிந்த அளவு பஸ்களை இயக்க அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர் பணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் கண்டக்டர் பேட்ஜ் மற்றும் லைசென்ஸ் உள்ளவர்கள் உடனடியாக சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாளரை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2000 தனியார் பேருந்துகளை இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏன் கொந்தளிக்கிறார்கள் ஊழியர்கள்?
இதேபோல, 2014 டிசம்பரில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திய தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் இடைக்கால நிவாரணத்தைச் சட்டமன்றத்தில் அறிவித்தது அரசு. அதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்ட வேலைநிறுத்தத்தால் பலரும் பாதிக்கப்பட்டனர். அப்போதும் தற்காலிக உத்திகளை மட்டுமே கையாண்டது அரசு. பிரச்னை இத்தனை சிக்கலாக முற்றியதற்கு அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கே காரணமாக இருந்துள்ளது என்பதுதான் வேதனை. இந்த வேலைநிறுத்தத்தால் லட்சக்கணக்கான மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

Dailyhunt
No comments:
Post a Comment