தவறான சிகிச்சையால் இன்ஜினியரிங் மாணவி பலி மருத்துவருக்கு 13 லட்சம் அபராதம்
2017-05-26@ 00:31:05
சென்னை: தவறான சிகிச்சையால் பெண் இன்ஜினியர் உயிரிழந்த வழக்கில் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு 13 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையை சேர்ந்தவர் விஸ்வநாதன், சாந்தி தம்பதியர். இவர்களது ஒரே மகள் ரேவதி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். காய்ச்சல் காரணமாக, கடந்த 2010ல் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, டாக்டர் தரன் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஊசி போட்ட சில மணி நேரத்தில் ரேவதி ரத்த வாந்தி எடுத்துள்ளார். மேலும் இதய பகுதி செயலிழக்க ஆரம்பித்துள்ளது. பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, ரேவதியை பரிசோதித்த மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை டாக்டர் தரன் கொடுத்த தவறான சிகிச்சையால்தான் உடலில் ஒரு பகுதி செயலிழந்து கோமா நிலைக்கு ரேவதி வந்துள்ளார் என்றனர்.
இதையடுத்து, கோமா நிலையில் உள்ள மகளை காப்பாற்ற தந்தை விஸ்வநாதன் சொத்துகளை விற்றுள்ளார். பலரிடம் கடன் வாங்கியுள்ளார். மேலும் பெற்றோர் மகளை காப்பாற்ற மருத்துவ செலவுக்காக பெரும் மன உளைச்சலடைந்துள்ளனர். இந்நிலையில், ரேவதி கடந்த 12.3.2014 அன்று இறந்துள்ளார். இதை தொடர்ந்து, தந்தை விஸ்வநாதன் ரேவதிக்கு தவறான ஊசிபோட்ட மருத்துவர் மீது செங்கல்பட்டு நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவானந்தஜோதி. விஸ்வநாதன் தம்பதிக்கு ரேவதி ஒரே மகள், கல்லூரி முடித்து வேலைக்கு சென்று இருப்பார். மேலும் ரேவதியை காப்பாற்ற பெற்றோர் பல கஷ்டங்கள் அடைந்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம், தவறான ஊசி போட்ட போரூரில் உள்ள தனியார் மருத்துவர் ஸ்ரீதரன்தான். இதனால் விஸ்வநாதனுக்கு இழப்பீடாக வழக்கு செலவுடன் சேர்த்து 13 லட்சத்து 56 ஆயிரத்தை புகார் அளிக்கப்பட்ட நாளிலிருந்து 7 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment