விழுப்புரம், ராமநாதபுரம் தர்மபுரியில் சட்ட கல்லூரிகள்
பதிவு செய்த நாள்26மே2017 01:13
சென்னை: 'விழுப்புரம், தர்மபுரி மற்றும் ராமநாதபுரத்தில், புதிதாக அரசு சட்டக் கல்லுாரிகள் துவக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், ஏழு அரசு சட்டக் கல்லுாரி களும், ஒரு தனியார் சுயநிதி சட்டக் கல்லுாரியும், இயங்கி வருகின்றன. மேலும், விழுப்புரம், தர்மபுரி மற்றும் ராமநாதபுரத்தில், புதிதாக மூன்று சட்டக் கல்லுாரிகள், 2017 - 18ம் கல்வியாண்டில் துவக்கப்படும்.
இப்புதிய சட்டக் கல்லுாரிகளில், 2017 - 18ம் கல்வியாண்டு முதல், மூன்றாண்டு படிப்பிற்கு, முதல் ஆண்டில், 80 மாணவர்களும், ஐந்தாண்டு படிப்பிற்கு, 80 மாணவர்களும், அம்பேத்கர் சட்டப் பல்கலை வாயிலாக சேர்க்கப்படுவர்.ஆசிரியர்கள் மற்றும் இதர தேவைக்கு, தலா, 2.27 கோடி ரூபாய் வீதம், மூன்று கல்லுாரிகளுக்கு, 6.81 கோடி ரூபாய் செலவிடப்படும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment