Tuesday, May 9, 2017

மருத்துவ பட்டமேற்படிப்பு கவுன்சிலிங்குக்கு எதிர்ப்பு: அரசு டாக்டர்கள் முற்றுகை போராட்டம் 80 பேர் கைதாகி விடுதலை

மருத்துவ பட்டமேற்படிப்பு கவுன்சிலிங்குக்கு எதிர்ப்பு:
அரசு டாக்டர்கள் முற்றுகை போராட்டம்
80 பேர் கைதாகி விடுதலை
 
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ பட்டமேற்படிப்பு கவுன்சிலிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 80 அரசு டாக்டர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.
சென்னை,

மருத்துவ பட்டமேற்படிப்புக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19 நாட்களாக அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசிடம் 3 முறை அரசு டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிவடைந்தது. 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில், ‘இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறியது. மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ‘எஸ்மா’ சட்டம் பாயும்’ என்றும் தெரிவித்து இருந்தது.

முற்றுகை போராட்டம்


இந்த தீர்ப்புக்கு பிறகு சில அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் இருந்து பின்வாங்கினாலும், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம், அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுப்படி, நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது. இந்த கவுன்சிலிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு டாக்டர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக நேற்று முன்தினம் தெரிவித்தனர்.

அதன்படி, நேற்று காலை கவுன்சிலிங் நடைபெறும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்திருந்தனர். அவர்கள் வருவதற்கு முன்னதாகவே மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கைது

மருத்துவமனை வளாகத்தில் தடுப்பு வேலி அமைத்து அரசு டாக்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அரசு டாக்டர்கள் அங்கே இருந்தவாறு 50 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும், நீட் தேர்வு வேண்டாம் என்றும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

அதைத்தொடர்ந்து போலீசார் முற்றுகையிட முயற்சி செய்த 20 பெண் டாக்டர்கள் உள்பட 80 அரசு டாக்டர்களை கைது செய்தனர். பின்னர், அவர்களை போலீசார் விடுதலை செய்தனர். 

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...