சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; 4 பேர் சாவு
சென்னை வடபழனியில் நேற்று அதிகாலையில் அடுக்குமாடி
குடியிருப்பில் நடந்த பயங்கர தீ விபத்தில் மூச்சுத்திணறி ஒரே குடும்பத்தை
சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
சென்னை,
சென்னை வடபழனி தெற்கு பெருமாள் கோவில் தெருவில் ஆர்.ஜே.இ.எஸ். என்ற பெயரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. தரைதளத்துடன் சேர்த்து 6 தளங்கள் இந்த குடியிருப்பில் உள்ளது. 6–வது தளத்தில் வீட்டின் உரிமையாளர் விஜயகுமார் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
மற்ற தளங்களில் ஏ, பி, சி, டி, இ, எப் என்ற 6 பிளாக்குளில் மொத்தம் 28 வீடுகள் உள்ளது. அதில் 6 வீடுகள் காலியாக உள்ளன. மற்ற 22 வீடுகளிலும் ஆட்கள் வசித்து வந்தனர்.
தாய்–மகள்
வீட்டின் முதல்மாடியில் மீனாட்சி (வயது 65) என்பவர் தனது மகள் செல்வி (40) உடன் வசித்து வந்தார். 2–வது தளத்தில் ஜான் கிறிஸ்டோபர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தரைதளத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மற்ற வீடுகளில் ஏராளமான திருமணமாகாத வாலிபர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் சென்னையில் ஆங்காங்கே வேலைபார்ப்பவர்கள்.
தரைதளத்தில் ஓட்டல், டெய்லர் கடை, மெக்கானிக் கடை, பிரிண்டிங் பிரஸ் உள்ளிட்ட 10 கடைகள் உள்ளன. சுற்றி கடைகள் அமைந்திருக்க தரைதளத்தின் நடுவில் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் பார்க்கிங் வசதியும் உள்ளது. பார்க்கிங் பகுதியில் இருந்து மேல்மாடிக்கு செல்வதற்கு படிக்கட்டு உள்ளது. அந்த படிக்கட்டு வழியாகத்தான் அனைவரும் மேல்மாடிக்கு போகவேண்டும்.
வசதிகள் இல்லை
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் முன்பக்கம் மட்டும் பால்கனி உள்ளது. பக்கவாட்டில் ஜன்னல்கள் ஏதும் இல்லை. காற்றோட்ட வசதி எதுவும் செய்யப்படவில்லை. விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் இந்த அடுக்குமாடி குடியிருப்பு 2002–ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர் விஜயகுமார் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி சென்றுவிட்டார். குடியிருப்பில் வசிக்கும் மற்ற அனைவரும் நேற்று முன்தினம் இரவு அசந்து தூங்கினார்கள். நேற்று அதிகாலை 4 மணி அளவில் தரைதளத்தில் மோட்டார் சைக்கிள்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தன. மொத்தம் 21 மோட்டார் சைக்கிள்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.
மூச்சுத்திணறல்
இந்த தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம் மாடிகளுக்கும் பரவியது. அனைத்து வீடுகளிலும் புகைமூட்டம் சூழ்ந்துகொண்டது. அனைவரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தபோது புகைமூட்டம் சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பதறி துடித்து எழுந்தார்கள். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் இருட்டாக காணப்பட்டது.
சிலர் பால்கனி பகுதிக்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது தான் தரைதளத்தில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தப்பித்து செல்வதற்கு படிக்கட்டு வழியாகத்தான் கீழே இறங்கி வரவேண்டும். ஆனால் படிக்கட்டு பகுதி முழுவதும் புகைமூட்டமும், தீ சுவாலையும் சூழ்ந்து இருந்ததால் யாரும் கீழே இறங்கிவர முடியவில்லை. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் ‘காப்பாற்றுங்கள்’ என்று அபயகுரல் எழுப்பினார்கள்.
கீழே குதித்து தப்பினர்
அவர்களின் அபயகுரல் கேட்டு, அந்த தெருவில் வசித்த மக்கள் அனைவரும் ஓடிவந்தனர். தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த திருமணமாகாத இளைஞர்கள் பக்கத்து மாடிகளுக்கு தாவி உயிர்தப்பினார்கள். அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள படுக்கைகளை, தீப்பிடித்த அடுக்குமாடி குடியிருப்பு முன்புபோட்டனர். சிலர் அந்த படுக்கையில் குதித்து உயிர் தப்பினார்கள்.
ஜெராக்ஸ் கடை நடத்திவரும் ஜான்கிறிஸ்டோபர் தனது மகன் கிறிஸ்டோவை 2–வது மாடியில் இருந்து கீழே தூக்கிவீசினார். பொதுமக்கள் பிடித்து இருந்த போர்வையில் இருந்து கிறிஸ்டோ தவறி கீழே விழுந்துவிட்டான். இதில் அவனது இரண்டு கால்களிலும் அடிபட்டு முறிவு ஏற்பட்டது. அவனை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர்.
15 தீயணைப்பு வண்டிகள்
ஜான்கிறிஸ்டோபர் தனது மனைவி மற்றும் தாயாருடன் லேசான காயத்துடன் பக்கத்து வீடுகளுக்கு ஏறி உயிர்தப்பினார்.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் 15 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. 3 வண்டிகள் மட்டுமே தீ விபத்து நடந்த தெருவிற்குள் நுழைய முடிந்தது. 2 வண்டிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 21 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் எரிந்து நாசமாகிப்போனது.
4 பேர் சாவு
இந்த பயங்கர தீ விபத்தில் புகைமூட்டத்தில் சிக்கி மூச்சுத்திணறி 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மீனாட்சி (வயது 65), அவரது மகள் செல்வி (40), மீனாட்சியின் பேரக்குழந்தைகள் சந்தியா (10), சஞ்சய் (3) ஆகியோர் பலியானார்கள்.
தீ விபத்தில் பலத்த காயமடைந்த 8 பேரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். லேசான காயமடைந்த 4 பேர் அசோக்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
போலீஸ் விசாரணை
தீ விபத்து பற்றி தகவல் கிடைத்த உடன் போலீஸ் கமிஷனர் கரன்சின்கா உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, பசுபதி, நாசர், பாஸ்கர் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்து தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னையில் வழக்கமாக கோடை வெயில் தொடங்கிய உடன் ஆங்காங்கே இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுவது வழக்கம். தற்போது கோடை தொடங்கிய பிறகு நடந்த முதல் தீ விபத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தது சென்னை நகரை உலுக்கியுள்ளது. விபத்து நடந்த தெற்கு பெருமாள் கோவில் தெருவே சோகத்தில் மூழ்கியது. வடபழனி முருகன் கோவில் அருகே இந்த தீ விபத்து சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment