Tuesday, May 9, 2017

பல ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஓய்வூதியம்; தள்ளாடும் வயதில் அவதிப்படும் தமிழக அரசு முன்னாள் ஊழியர்கள்

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த கோரிக்கை

தமிழக அரசில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள ஊழியர்கள் பலருக்கு ரூ. 3000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படு வதால் வயதான காலத்தில் அல்லல்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள சுமார் 7 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தி யுள்ளது. இந்த பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய நிதித் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் கே. சண்முகம் தலை மையில் குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்த குழுவினர் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வுபெற்ற வர்களுக்கு ஓய்வூதியம் ஆகி யவை குறித்து அரசுக்கு பரிந் துரைகளை அளிக்கவுள்ளனர்.
வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் தனது அறிக் கையை அரசுக்கு இந்த குழு அளிக்கவுள்ளது. இந்த நிலை யில் குறைந்தபட்ச ஓய்வூதி யத்தை தற்போதுள்ள ரூ.3,050-ல் இருந்து ரூ. 9 ஆயிரமாக உயர்த்த வேண்டும், மருத்துவப் படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் ஓய்வூதியர்கள்.
ஓய்வூதியர்களின் பிரச் சினைகள் மற்றும் கோரிக்கை கள் குறித்து அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷ னர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஏ.சாமிநாதன் கூறி யது:
2006-ம் ஆண்டுக்கு முன்பு வரை மத்திய அரசு பணி யாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3,500 இருந் தது. தமிழக அரசும் ரூ.3,500 என நிர்ணயித்து இருந்தது. ஆனால் 2006 ஜனவரி மாதத் தில் பல்வேறு காரணங்களை சொல்லி தமிழக அரசு குறைந்த பட்ச ஓய்வூதியத்தை மேலும் குறைத்து, ரூ. 3,050-ஆக நிர்ண யித்தது.
2006 முதல் தற்போது வரை யிலான இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசு ஓய்வூதியர்களுக் கான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000-ஆக அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அப் படியே இருக்கிறது. இதற்கு காரணம் தமிழக அரசு ஊழியர் களுக்கான அடிப்படை ஊதி யம் ரூ.6,100 என இருப்பதே ஆகும். தமிழக அரசில் ரூ. 6,100-ஐ அடிப்படை ஊதியமாக பெறும் ஊழியர் செய்யும் அதே வேலையை செய்கிற மத்திய அரசு ஊழியருக்கு ரூ. 18000 அடிப்படை ஊதியம். மத்திய அரசு ஓய்வூதியர்கள் தற்போதுள்ள ரூ. 9 ஆயிரத்தை உயர்த்தித் தர வேண்டும் என கோரி வருகின்றனர். ஆனால் நாங்களோ, அந்த ரூ. 9 ஆயி ரத்தையாவது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
மாதாந்திர மருத்துவச் செலவுகளுக்கு தமிழக அரசு ரூ.100 மட்டுமே தருகிறது. 8 ஆண்டுகளாக இதே தொகையே கிடைக்கிறது. மருத்துவ காப்பீடு என ஓய்வூ தியத்தில் இருந்து ரூ. 150 பிடித் தம் செய்கிறார்கள். இதன் மூலம் மருத்துவ சிகிச்சையை பணம் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம் (கேஷ்லெஸ் ட்ரீட்மென்ட்) என கூறுகிறார் கள். ஆனால் மருத்துவமனை களில் பணம் கேட்கிறார்கள். அதற்கான ரசீது கொடுப்ப தில்லை. இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் பல ஆண்டு களாக நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.
நல்ல ஊதியத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓரளவு நல்ல ஓய்வூதியம் கிடைக்கிறது. ஆனால் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி கடைநிலை ஊழிய ராக இருந்தவர்களுக்கு குறைந் தபட்ச ஓய்வூதியமே (ரூ.3,050) வழங்கப்படுகிறது. இதனால் வயதான காலத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கே.சண்முகம் குழுவினர் அறிக் கையை அரசுக்கு தாக்கல் செய் வதற்கு முன்னர் ஓய்வூதியர் களின் நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024