Monday, June 12, 2017

10 லட்சம் போலி 'பான்' கார்டுகளா?ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி

புதுடில்லி:'நாடு முழுவதும், தனிநபர் பெயரில் உள்ள, 10.52 லட்சம் போலி, 'பான்' கார்டுகளை, குறைந்த எண்ணிக்கையாக எடுத்துக் கொள்ள முடியாது; அது, நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்க கூடும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.





வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வாங்குவதற்கும், ஆதாரை கட்டாய மாக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

'ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில், வருமான வரிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் செல்லும்' என, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண் அமர்வு, தீர்ப்பு அளித்தது.

அப்போது, நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் கூறிய தாவது:நாடு முழுவதும் உள்ள, 11.35 லட்சம் போலி பான் கார்டுகளில், 10.52 லட்சம் போலி கார்டுகள் தனிநபர் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் தான், நிறுவனங்களை துவக்குகின்றனர்.

கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக போலி நிறு வனங்களை உருவாக்க, இதுபோன்ற போலி பான் கார்டுகளை தனிநபர்கள் பயன்படுத்துவதாக, மத்திய அரசு சார்பில் கூறப்பட்டதை ஏற்கிறோம். தனிநபர் பெயரில் உள்ள, 10.52 லட்சம் போலி பான் கார்டுகள் என்பது, மொத்த கார்டுகளில் 0.04 சதவீதம் தான்.

அதனால், அதை கருத்தில் எடுத்து கொள்ள கூடாது என்ற வாதத்தை ஏற்க முடியாது. இந்த போலி பான் கார்டுகள், நாட்டின் பொருளாதாரத் துக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் தேவை. அதில் ஒன்றாகவே இதை பார்க்கிறோம். இவ்வாறுதீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ராஜிவை மேற்கோள் காட்டிய நீதிபதிகள்பான் கார்டு டன் ஆதாரை இணைப்பது தொடர்பான வழக்கில், 157 பக்கத் தீர்ப்பில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளதாவது:

'ஏழைகளுக்காக அரசு செலவிடும் ஒரு ரூபாயில்,15 காசுகள் தான், ஏழைகளுக்கு சென்றடை கிறது' என, முன்னாள் பிரதமர் ராஜிவ், 1985ல், ஒரு கருத்தை கூறியிருந்தார். மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை நாடு அடைந்த போதும், ஏழை, எளிய மக்களுக்கு அதன் பலன் கள் முழுமையாக போய் சேர வில்லை. ஆதார் திட்டத்தின் மூலம், இந்தக் குறையை களைய முடியும் என, முழுமையாக நம்புகிறோம்.

திட்டப் பலன்கள், உரியவர்களுக்கு முழுமை யாக சென்றடைவதற்கு ஆதார் உதவுகிறது. போலிகளுக்கும், தகுதியில்லாதவர்களுக்கும் அரசு திட்டப் பலன்கள் சென்றடைவதை தடுக்க முடியும்.இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024