தஞ்சையில் எய்ம்ஸ் அமைக்க அரசு பரிந்துரை :
மதுரையில் அதிக வசதிகள் இருக்காம்
தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மத்திய அரசு கேட்ட, 10 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, தஞ்சையில் மருத்துவமனை அமைக்க பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில், எய்ம்ஸ் அமைக்கப்படும் என, 2015ல், மத்திய அரசு அறிவித்தது. அதற்காக, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சி புரம் ஆகிய, ஐந்து இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்த இடங்களை, மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
ஐந்து இடங்களில், ஏதாவது ஒன்றை உறுதி செய்ய, அனைத்து இடங்கள் குறித்தும், சவாலான, 10 கேள்விகள் கேட்டு, மத்திய அரசு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதில், ரயில், விமான போக்குவரத்து கட்டமைப்புகள், மருத்துவமனை வசதிகள், வேலை வாய்ப்புகள் குறித்தும், கேட்கப்பட்டு இருந்தன.
அக்கடிதத்திற்கு, இரண்டு மாத தாமதத்திற்கு பின், தமிழக அரசு பதில் அனுப்பி உள்ளது. இந்த கடிதம், நமது நாளிதழுக்கு கிடைத்துள்ளது. அதில், 'தஞ்சை மட்டுமே எய்ம்ஸ் அமைக்க தகுதியானது' என, தமிழக அரசு வெளிப்படையாக,குறிப்பிட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில், 350 கோடி ரூபாய்க்கு பல திட்டங்கள் செயல் படுத்தப்பட உள்ளதால், இங்கு எய்ம்ஸ் தேவை இல்லை என்ற தொனியில், கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
மத்திய, மாநில அரசு திட்டங்கள் அனைத்திலும் புறக்கணிக்கப்பட்டு வரும் தென் மாவட்ட மக்கள், எய்ம்ஸ் மருத்துவமனையாவது, தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், ஏமாற்றமே கிடைத்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை செயலர், ராதா கிருஷ்ணன் கூறியதாவது:நேர்மையான முறை யில், எய்ம்ஸ் அமையும் இடம் குறித்த தகவல்கள், அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசு எந்த இடத்தை தேர்வு செய்தாலும்,தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை நிராகரிப்பு ஏன்? :
* மருத்துவ வசதிகள் குறித்த கேள்விக்கு, மதுரை மண்டலத்தில், ஒரு அரசு மற்றும் தனியார் கல்லுாரி கள் இருப்பதாகவும், 150 கோடி ரூபாயில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை கட்டப்பட்டு
வருவதாகவும், தமிழக அரசு கூறியுள்ளது.* தஞ்சையில் மருத்துவக் கல்லுாரி இருப்ப தையும், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவ மனை கட்டப்பட்டு வருவதையும் குறிப்பிட வில்லை. தஞ்சையை விட, மதுரையில், அதிக மருத்துவ வசதிகள் உள்ளதாக காட்டப்பட்டு உள்ளது
*மதுரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில், எரிவாயு குழாய்கள் செல்வ தாக, மாநில அரசு சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், அதை தவிர்த்து மருத்துவமனை அமைக்க இடம் உள்ளது. எரிவாயு குழாய் களை, வேறு இடத்திற்கு மாற்ற, மாவட்ட நிர்வாகம் தயாராக இருந்தது.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment