Sunday, June 11, 2017

குறித்த நேரத்தில் இயக்காவிட்டால் மீண்டும் விமான சேவை முடங்கும்

பதிவு செய்த நாள்10ஜூன்2017 19:13

சூரமங்கலம், : சேலத்தில், குறித்த நேரத்தில் விமானம் இயக்காவிட்டால், மீண்டும் அதன் சேவை முடங்கும் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, இந்திய தொழில் வர்த்தக சபை, சேலம் மாவட்ட தலைவர் மாரியப்பன் கூறியதாவது:
சேலம் விமான நிலைய சேவை ரத்தானதற்கு காரணம், மாலை, 4:20 மணிக்கு, விமானம் சென்னையில் இருந்து வந்து, 5:20 மணிக்கு சென்னை திரும்பியதே காரணம்.
எனவே, காலை, 7:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, 8:00 மணிக்கு சேலம் வந்து சேர வேண்டும். 9:00 மணிக்கு, இங்கிருந்து புறப்பட்டு, 10:00 மணிக்கு சென்னை செல்லும்படி, விமானத்தை இயக்கினால், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் பயன்படுத்துவர்.
அவர்கள், தங்கள் பணிகளை முடித்துவிட்டு, மீண்டும் மாலை, 5:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்படி, விமான சேவை வழங்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவெடுத்தால், சேவை தொடரும். இல்லையெனில், விமான சேவை கேள்விக்குறியாகிவிடும்.
வெளிநாடுகளில் இருந்து, சென்னைக்கு அதிகாலை வரும் பயணிகள், காலை, 7:00 மணிக்கு, அங்கிருந்து புறப்படும் வகையில், விமானத்தை இயக்க வேண்டும்.
சேலத்தில் தொழில்நுட்ப பூங்கா செயல்பட தொடங்கியுள்ளதால், தொழிற்சாலைகள் அமைய வாய்ப்புள்ளது. அதனால், குறித்த நேரத்தில் விமான சேவை இருக்க வேண்டும்.
சேலம் விமான நிலையத்துக்கு, உரிய பாதுகாப்பு செலவை மாநில அரசு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024