Wednesday, June 14, 2017

காஞ்சிபுரம் வந்தார் ஜனாதிபதி பிரணாப் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்

பதிவு செய்த நாள்13ஜூன்2017 22:38




காஞ்சிபுரம்: டில்லியிலிருந்து காஞ்சிபுரத்திற்கு நேற்று வந்த, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரசித்தி பெற்ற, காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று, தரிசனம் செய்தார். ஸ்ரீசங்கர மடம் சென்ற அவர், சங்கராச்சாரியார்களிடம் ஆசி பெற்றார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த மாதம், 24ல், காஞ்சிபுரம் வர திட்டமிட்டிருந்தார். ஆனால், திடீரென, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அவர், காஞ்சிபுரம் வந்தார். இதற்கான பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள், கடந்த சில நாட்களாகவே நடந்தது.திட்டமிட்ட படி, டில்லியிலிருந்து சிறப்பு விமானத்தில், வேலுார் மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள, 'ராஜாளி' கடற்படை தளத்திற்கு, பகல், 1:30க்கு அவர் வந்தார். அங்கிருந்து, குண்டு துளைக்காத காரில் சாலை வழியாக, 2:30 மணிக்கு, காஞ்சிபுரம் வந்தார். காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, எஸ்.பி., சந்தோஷ் ஹதிமனி, பூங்கொத்து கொடுத்து, வரவேற்றனர். விருந்தினர் மாளிகையிலிருந்து, பட்டாடை உடுத்தி, காமாட்சியம்மன் கோவிலுக்கு புறப்பட்டார்.

கோவில் வாசலில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, பிரணாப் முகர்ஜிக்கு பொன்னாடை அணிவித்து, வரவேற்றார். காமாட்சியம்மன் கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பேட்டரி காரில் ஏறி, கோவிலுக்குள் சென்றார். காமாட்சியம்மனை தரிசித்த பின், பேட்டரி காரில் கோவிலை சுற்றிப் பார்த்தார். தரிசனம் முடிந்த பின், கோவிலிலிருந்து புறப்பட்டு, 3:50 மணிக்கு ஸ்ரீசங்கர மடம் வந்தார். அங்கு, ஜனாதிபதியை, விஜயேந்திரர்
வரவேற்றார். மடத்திற்குள் சென்று, ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரிடம், பிரணாப் முகர்ஜி ஆசி பெற்றார். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. ஸ்ரீசங்கர மடத்திலிருந்து வெளியே வந்த பிரணாப் முகர்ஜி, காரில் ஏறி, அரக்கோணம், ராஜாளி கடற்படை தளம் சென்று, டில்லி
புறப்பட்டார்.ஜனாதிபதி வருகையை ஒட்டி, அரக்கோணம் சாலை மற்றும் காஞ்சிபுரம் முழுவதும், வடக்கு மண்டல, ஐ.ஜி., ஸ்ரீதர் தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நகரின் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பிரணாப் வருகையால், நகரில், இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது. எனினும், இயல்பான போக்குவரத்து மற்றும் பிற செயல்பாடுகள் இருந்தன.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...