Thursday, June 15, 2017

ஆவின் பால் கலப்பட வழக்கு விசாரணைக்கு தடை : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பதிவு செய்த நாள்14ஜூன்2017 23:46

சென்னை: போக்குவரத்து நிறுவனத்துக்கு எதிரான, ஆவின் பால் கலப்பட்ட வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள ஊரல் கிராமத்தில், ஆவின் டேங்கர் லாரியில் கொண்டு வந்த பாலில், தண்ணீர் ஊற்றி கலப்படம் செய்ததாக, 2014 ஆகஸ்ட்டில் குற்றச்சாட்டு எழுந்தது.

19 பேர் கைது : இது குறித்து, சென்னையை சேர்ந்த, டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் என்பவர் உட்பட, 19 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.விழுப்புரத்தில் உள்ள, தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், 'சவுத் இந்தியா ரோடு மில்க் டிரான்ஸ்போர்ட்' நிறுவனம் சார்பில், அதன் உரிமையாளர் வைத்தியநாதன் தாக்கல் செய்த மனு:
என் சொந்த நிறுவனத்துக்கு எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, சட்டத்துக்கு முரணானது.

குற்றப்பத்திரிகை தாக்கல் : சட்டத்தின் பார்வை யில், இந்த நிறுவனத்தை, சட்டப்படியான நபராக கருத முடியாது. எனவே, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, சட்டப்படியானது அல்ல. ஆனால், குற்றப் பத்திரிகையை, நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. நிறுவனமும், அதன் உரிமையாளரும் ஒருவர் என்றாலும், இரண்டு பேரையும் வெவ்வேறு நபராக காட்டியுள்ளனர். அதன்படி, நிறுவனத்தின் மீதும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு
உள்ளது.

உத்தரவு : எனவே, நிறுவனத்துக்கு எதிரான வழக்கை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி மகாதேவன் முன், விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு, இரண்டு வாரங்களுக்கு தடை விதித்து, நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.
விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...